வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
டியூசன் சென்று வந்த 16 வயது சிறுமி ஐவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
அசாம் மாநிலத்தில் உள்ள கவஹாத்தி, மஜபாட் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி தினமும் பள்ளிப்படிப்பு நிறைவுபெற்று வீட்டிற்கு வந்ததும், டியூசன் சென்று பயின்று வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டில் இருந்து டியூசன் சென்றுவிட்டு, பின் மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டு இருந்தார். அச்சமயம் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்தவாறு, வீதி கொண்டுசென்று இறக்கி விடுவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழங்குடியின பெண் கூட்டுப்பலாத்காரம்; உதவிக்காக 1.5 கி.மீ அரைநிர்வாணமாக ஓட்டம். உ.பி-யில் மற்றொரு கொடூரம்.!
ஐவர் கும்பலால் சிறுமி பலாத்காரம்
இதனை நம்பி இருசக்கர வாகனத்தில் ஏறி பயணம் செய்த சிறுமியை, கயவன் அங்குள்ள செங்கல்சூளை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமி ஐவர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின் சிறுமியை அவரின் வீட்டிற்கு அருகே, சிறிது தொலைவில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்ததை கூறி கதறவே, ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், கயவனின் வீட்டிற்கு சென்று தீவைத்து கொளுத்தி இருக்கின்றனர். இந்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
ஐவர் கைது, பதற்றம்
மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் இருந்து புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்ற சூழலும் உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் பகீர்; இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. வேலை வாங்கிக்கொடுப்பதாக கொடுமை.!