மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்கள் நீராடி உடை மாற்றுவதை நேரலையில் பார்த்து ரசித்த காமுகன்; செல்போன் முழுதும் ஆபாச காட்சிகள்..!
பெண்களை போகப்பொருளாக என்னும் கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் பல்வேறு வகையில் அதிகரித்து வருகிறது. இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களை தடுக்க வழிவகை செய்யும்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத் மாவட்டம், முரத்நகர், கங்காநகர் பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பெண்கள்-ஆண்கள் உடை மாற்றும் அறை தனித்தனியே இருக்கிறது. கங்கை நதிக்கரையோரம் இருக்கும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், நதியில் நீராடி மகிழ்வார்கள் என்பதால், அவர்கள் நீராடி பின் உடை மாற்ற தனியார் சார்பில் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் உடை மாற்றும் வீடியோ
இதனிடையே, பெண்கள் உடை மாற்றும் அறையில் சமீபத்தில் சிசிடிவி கேமிரா கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய மஹந்த் முகேஷ் கோஸ்வாமியின் அலுவலகம் & வீட்டில் நடந்த சோதனையில், 70 க்கும் அதிகமான பெண்கள் உடை மாற்றும் வீடியோ பதிவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நீச்சல் குளத்தில் சாகசம்; இளைஞரின் உயிரைப்பறித்த அலட்சியம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
கோஸ்வாமியை கைது செய்ய தீவிரம்
மேலும், தலைமறைவாக உள்ள நபரை கைது செய்ய தனிப்படை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளையில், ஆற்றுப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்ததாக புல்டோசர் கொண்டு தற்காலிக கட்டுமானங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
மஹந்த் முகேஷ் கோஸ்வாமியின் தரவுகளில், இறுதியான 5 நாட்களுக்கான பதிவுகள் மட்டுமே இஇருந்துள்ளது. அதற்கு முன்பு இக்கொடுமை எத்தனை நாட்களாய் நடந்தது? பதிவு செய்யப்பட்ட மொத்த வீடியோ எண்ணிக்கை எத்தனை என்ற விபரம் அவர் கைதான பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 5 நாட்களில் 75 க்கும் மேற்பட்ட பெண்களின் உடை மாற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
गाजियाबाद : महिलाओं के चेंजिंग रूम में CCTV कैमरा लगाकर Live फीड देखने वाले महंत मुकेश गोस्वामी के अवैध निर्माण पर बुलडोजर चला। महंत ने गंगनहर किनारे 10–12 अस्थाई दुकान सिंचाई विभाग की जमीन पर खुलवा रखी थी। महंत फरार है, तलाश जारी है।pic.twitter.com/Ui5mrIsNy1
— Ashraf Hussain (@AshrafFem) May 25, 2024
இதையும் படிங்க: கோவிலுக்கு வரும் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா; லைவ் வீடியோவில் பார்த்து ரசித்த பயங்கரம்.!