திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவனை துரோகத்தீயில் தள்ளி, மனஉளைச்சலில் தற்கொலை செய்த இளம்பெண்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹமிர்பூர் பகுதியை சேர்ந்த பெண்மணி வர்ஷா ராணி (வயது 25). இவர் ஹமிர்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வர்ஷாவுக்கு இளைஞர் ஒருவருடன் திருமணம் நடைபெற்று முடிந்தது. பெண்மணி தன்னுடன் பணியாற்றி வந்த நபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் விருப்பத்தின் பேரில் வேறொருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்ல மறுத்த பெற்றோர்; விரக்தியில் 10 வயது சிறுமி தற்கொலை.!
காதலருடன் வாழ முடிவு
பிடிக்காத நபருடன் வாழ விருப்பம் இல்லாத பெண்மணி, தனது கணவரை விட்டுவிட்டு காதலருடன் ஓட்டம் பிடித்தார். இதனிடையே காதலரும், பெண்ணை பயன்படுத்தி கைவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்துபோன பெண்மணி கணவருக்கு துரோகம் செய்துவிட்டோம் என எண்ணி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின் தகவல் அறிந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கைவிட்ட காதலனால் சோகம்
அங்கு பெண்ணின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் முன்னாள் காதலருக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை; காவல்துறை விசாரணை.!