மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உபியில் கொடூரம்... 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமி கற்பழிப்பு.!! குற்றவாளி கைது.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் அரங்கேறி இருக்கும் மற்றுமொரு பாலியல் பலாத்கார சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. காது கேளாத 10 வயது சிறுமி மர்ம நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக 42 வயது நபரை கைது செய்துள்ள காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
10 வயது மாற்றுத்திறனாளி சிறுமி
உத்திரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமிக்கு பிறந்ததிலிருந்து காது கேட்பதில் குறைபாடு இருந்திருக்கிறது. கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். அன்று பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.
பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தது.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் கொடூரம்... 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! ஆசிரியர் கைது.!!
குற்றவாளி கைது
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் 42 வயதான மனோஜ் ராய்க்வார் என்ற நபர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமி அபாய கட்டத்தை தாண்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! 27 வயது நபர் கைது.!!