மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியை கொலை செய்து நகை-பணம் திருட்டு? நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, காஜிப்பூர், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திர நாந் துபே. இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். துபெயின் மனைவி மோகினி (வயது 71). இன்று காலை துபே கோல்ப் விளையாட வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய சமயத்தில், மனைவி சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், வீட்டின் அலமாரி திறந்து, பொருட்களும் சிதறிக்கிடந்துள்ளன.
இதையும் படிங்க: மனைவியை கொன்று, உடலை கூறுபோட முயற்சித்த கணவன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
மர்ம கொலை, நகைகள் கொள்ளை
இதனையடுத்து, தனது மனைவி கொலை செய்யப்பட்ட பின்னர், வீட்டில் கொள்ளை நடந்து இருக்கலாம் என சந்தேகித்தவர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, காஜிப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "எவன் கூட வீடியோ கால் பேசுற." மனைவியை கொன்று, பிணத்தை என்ன செய்தார் தெரியுமா.?!