திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அழுது கொண்டே இருந்த 3 வயது குழந்தையை அடித்துக்கொன்ற தாய்; குடும்பச்சண்டையில் ஆத்திரம்.!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், ஹிங்கனா சாலை பகுதியில் வசித்து வரும் தம்பதி ட்விங்கிள் ராவத் (வயது 23) - ராம லக்ஷ்மன் ராவத் (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். தற்போது வேலை காரணமாக ஹிங்கனா சாலை பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருக்கின்றனர்.
தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு
ராம லக்ஷ்மன் ராவத் அங்குள்ள பேப்பர் மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சமீபகாலமாகவே குடும்பத்தில் சண்டை நிலவி வந்துள்ளது.
இதையும் படிங்க: நீச்சல் குளத்தில் சாகசம்; இளைஞரின் உயிரைப்பறித்த அலட்சியம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
குழந்தை அடித்தே கொலை
சம்பவத்தன்று குழந்தை அழுதுகொண்டு இருந்த நிலையில், அதனை தாய் ட்விங்கிள் ராவத்தால் சமாதானம் செய்ய முடியவில்லை. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் குழந்தையை கடுமையாக தாக்கிவிட்டு, அதனை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இந்த தகவல் அறிந்த கணவர், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தாய் கைது
இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பெண்ணை 4 கி.மீ தொலைவில் கண்டறிந்து குழந்தையை மீட்டனர். குழந்தை உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், அங்கு குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இவ்விசாரணைக்கு பின் ட்விங்கிள் ராவத் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை; காவல்துறை விசாரணை.!