திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"தலைகீழாகத்தான் குதிப்பேன்" - ரீல்ஸ் மோகத்தால் 100 அடி ஆழ குவாரி குட்டையில் விழுந்த சிறுவன் பலி.! மூச்சுத்திணறி பரிதாபம்.!!
ரீல்ஸ் மோகம் பல உயிர்களை பழிவாங்கினாலும், அதன் மீதான ஆர்வம் ஒவ்வொருவரையும் தவறான பாதையில் செல்ல வழிவகை செய்கிறது.
ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ள சாஹிப்கன்ச் மாவட்டடத்தை சேர்ந்த 18 வயது சிறுவன் தவுஸிப். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு மகிழும் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஆவார்.
கல்குவாரி குட்டையில் குளியல்
இந்நிலையில், சம்பவத்தன்று அங்குள்ள கல்குவாரி ஒன்றுக்கு தனது நண்பர்களுடன் சென்ற தவுஸிப், 100 அடி உயரமுள்ள முகட்டில் இருந்து தான் குவாரிக்குள் தேங்கியுள்ள நீரில் குதிக்கும் வீடியோவை நண்பர்களிடம் பதிவு செய்ய சொல்லியுள்ளார்.
இதையும் படிங்க: மச்சா 160 ல போடா.. நொடியில் பறிபோன 2 உயிர்.. லைவ் வீடியோவில் அதிர்ச்சி காட்சிகள்.!
ரீல்ஸ் வீடியோ உயிரை பறித்தது
நண்பர்களும் ஆரவாரப்படுத்தியதைத்தொடர்ந்து தவுஸிப் குவாரி நீரில் குதிக்க, சில நொடிகளில் அவர் நீரில் மூழ்கிப்போனார். பதறிப்போன நண்பர்கள் மீட்க முயற்சித்தும் பலனில்லை.
சிறுவன் சடலமாக மீட்பு
பின் உடனடியாக உள்ளூர் நபர்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தாவூசிபின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sahibganj में Reel बनाने के चक्कर में युवक ने 100 फीट की ऊंचाई से पानी में लगाई छलांग, मौत#News11Bharat #News #BreakingNews #LatestNews #ranchiNews #JharkhandNews #NewsLive #Live #LatestUpdates #JharkhandNews #LatestNewsToday pic.twitter.com/MW6LUj71xI
— News11 Bharat (@news11bharat) May 22, 2024
ஜெய்ஹிந்த் படத்தில் நடிகர் கவுண்டமணி செந்திலிடம் நீச்சல் குளத்தில் குதிக்க கனவில் பந்தயம் கட்டி, தலைகீழாகத்தான் குதிப்பேன் என மாடியில் இருந்து கீழே விழுந்து கை-கால்களை முறித்துக்கொள்வார். ஆனால், இந்த சம்பவத்தில் உயிர் பறிபோயுள்ளது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியிடம் இருவர் கும்பல் பலமுறை அத்துமீறல்; இன்ஸ்டா பழக்கத்தால் நடந்த சோகம்.!