ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
நீட் தேர்வு எழுதிய மாணவிகளிடம் அத்துமீறல்: பரபரப்பை ஏற்படுத்திய புகார் மனு..!
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடைகளை கழற்றி ஆராய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், அயூரில் உள்ள தேர்வு மையத்தில் இத்தகைய கொடுமை நடந்தேறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் சூரநாடு காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், தேர்வு மையத்தின் நுழைவு வாயிலில் அவரது உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த செயலால் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அவருக்கு மட்டும் இல்லாமல் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இது போன்ற சோதனை நடத்தப்பட்டதாகவும், மாணவர்களின் உள்ளாடைகள் பெறப்பட்டு அவற்றை இரண்டு அறைகளில் வைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் தெரிவித்துள்ளார்.