காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்த காருக்கு ரூ.2.5 இலட்சம் அபராதம் விதிப்பு; வீடியோ வெளியானதால் காவல்துறை அதிரடி.!
கேரளா மாநிலத்தில் உள்ள 108 அவசர ஊர்தி ஒன்றுக்கு, KL 64 E 6226 பதிவெண் கொண்ட வாகனம், வழிவிட மறுத்து சாலையில் பயணம் செய்வது தொடர்பான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.
அவசரமாக சைரனை ஒலிக்கவிட்டிட்டு அவசர ஊர்தி பயணம் செய்தபோதும், வாகன ஓட்டி வேண்டும் என்றே வழிவிடாமல் பயணம் செய்தார். இதனால் மருத்துவ உதவியாளர், அதனை செல்போனில் காட்சிப் பதிவு செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: எமனாக மாறிய லிவிங் டுகெதர் உறவு... கள்ளக்காதலி உயிருடன் எரித்து கொலை.!!
வீடியோ வைரல் & காவல்துறை விசாரணை
இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்தை குவித்த நிலையில், அம்மாநில காவல்துறையினர் விசாரணை நடத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி, காவல் துறையினர் காரின் பதிவெண் கொண்டு, அதன் உரிமையாளரை கண்டறிந்தனர்.
இதனையடுத்து, அவசர ஊர்திக்கு வழிவிடாமல் பயணம் செய்த வாகனத்திற்கு ரூ.2.5 இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால், சிறை வாசத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கண்டிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓவர் டேக் செய்ய விடாமல் தடுத்த வாகன ஓட்டிக்கு கேரளா போலீஸ் 2.5 லட்சம் (Fine) பரிசு வீடு தேடி வந்து கொடுத்தது. pic.twitter.com/XpwyevKsDT
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) November 16, 2024
இதையும் படிங்க: ஓடும் இரயிலில் ஏற முயன்று நூலிழையில் உயிர் தப்பிய கல்லூரி மாணவி; அலறிய பொதுமக்கள்.. அதிரவைக்கும் வீடியோ.!