திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரைகுறை ஆடையுடன் 1.5 கி.மீ ஓடிய இளம்பெண்.. கிராம மக்கள் அதிர்ச்சி.!
என்னதான் பெண்கள் பாதுகாப்புக்காக சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டாலும் கூட நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. சிறுமிகள் மற்றும் மூதாட்டிகளுக்கு கூட பாலியல் வன்கொடுமை நடைபெறுவது தான் பயங்கரமான கொடுமை. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதே ஆண்களால் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் பகுதியில் வசித்து வந்த
ஒரு பெண்ணை இரு ஆண்கள் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர். அந்தப் பெண்ணை உயிரோடு விட்டால் அவர் தங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவார் என்று நினைத்த அவர்கள் அந்த பெண்ணை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதனால், பயந்து போன அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட முயற்சித்துள்ளார்.
அரைகுறை ஆடையுடன் அந்தப் பெண் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தப்பி ஓடி அங்கிருந்த கிராம மக்களிடம் தனக்கு நடந்த கொடுமையை அந்த பெண் விவரித்து கதறி அழுதுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.600-க்காக மகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை; தூக்கத்திலேயே பறிபோன உயிர்.!
இதை கேட்ட கிராம மக்கள் அந்தப் பெண்ண பின் தொடர்ந்து வந்த கயவர்களைப் பிடித்து சரமாரியாக தாக்கி, அடித்து, உதைத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு வந்து அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு வற்புறுத்திய தந்தையை கொலை செய்த மகள்? அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பணிஓய்வு வயதில் நடந்த கொடூரம்.!