புதுச்சேரியில் பயங்கரம்... பலான புரோக்கர் வீட்டில் பெண் சடலம்.!! காவல் துறை விசாரணை.!!



young-woman-dead-body-found-in-a-pimp-house-police-susp

புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்காலில் பாலியல் புரோக்கர் ஒருவரின் வீட்டில் இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாலியல் புரோக்கரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான பெண்ணுடன் பாலியல் ப்ரோக்கர்

காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன். பாலியல் புரோக்கரான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தயாளன் கடந்த சில தினங்களாக வினோதினி என்ற திருமணமான இளம் பெண்ணுடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

pudhucherry

காவல்துறைக்கு தகவல்

இந்நிலையில் தயாளன் வீட்டில் வினோதினி இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தயாளன் வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்த போது வினோதினி உறங்கிக் கொண்டிருக்கிறார் நீங்கள் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு தப்பியோட முயன்றிருக்கிறார். அப்போது வினோதினியை காவலர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரிய வந்தது.

இதையும் படிங்க: கேரளாவில் கொடூரம்... 15 வயது சிறுமி கூட்டு பல்லாதகாராம்.!! 3 சிறுவர்கள் வெறி செயல்.!!

புரோக்கர் கைது

இதனைத் தொடர்ந்து தப்பியோட முயன்ற புரோக்கர் தயாளனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த வினோதினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். போஸ்ட்மார்ட்டதுக்கு பின்னரே வினோதினி கொலை செய்யப்பட்டாரா.? என்பது தெரியவரும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: மும்பையில் பரபரப்பு... 12 வயது சிறுமி கற்பழிப்பு குற்றவாளி மர்ம மரணம்.!! போலீஸ் விசாரணை.!!