40 ரூபாய் உப்மா ரூ.120க்கு விற்பனை.. ஹோட்டலை விட Zomato-வில் 3 மடங்கு அதிக கட்டணம்.!!



zomato-price-of-food-3-time-high-than-hotel-price

துரித உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடும் உணவுகள் உடல் நலத்தை கேடாக்கும் என பல விழிப்புணர்வுகள் மேற்கொண்டாலும், இயலாமை மற்றும் வேறு வழியின்றி பலரும் அதனை வாங்கி சாப்பிடுகின்றனர். 

உணவுப்பிரியர்களின் விருப்பத்தை புரிந்து வியாபாரத்தை பெருக்க திட்டமிட்ட நிறுவனங்கள், உணவுகளை வீட்டின் வாசலுக்கே கொண்டு வந்து டெலிவரி வசதியை கொண்டு வந்தது. இதன் வாயிலாக ஆப்-பில் ஆர்டர் செய்யும் பலரும், வீட்டில் இருந்தபடி தங்களின் உணவுகளை பெற்று ருசிபார்த்து வருகின்றனர். 

3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூல்

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வரும் பத்திரிகையாளர், உணவகத்தில் சாப்பிடும் உணவுடன் Zomato நிறுவனத்தின் ஆன்லைன் டெலிவரி பில்லையும் ஒப்பிட்டு இருக்கிறார். இதன் வாயிலாக உணவகத்திற்கு நேரில் சென்றால் ரூ.40க்கு கொடுக்கப்படும் உப்மா, Zomato-வில் ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதையும் படிங்க: அடேங்கப்பா... ரூ.19.51 இலட்சம் கொடுத்து பேன்சி நம்பர் பிளேட் வாங்கிய நபர்; ரொம்ப ராசியான நம்பர் போல.!

அதேபோல, ரூ.120 க்கு விற்பனை செய்யப்படும் தட்டு இட்லி, Zomato-வில் ரூ.161 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடைகளில் சென்று சாப்பிட விரும்புவோர், உங்களின் வசதிக்கேற்ப முடிவெடுக்க வேண்டிய நிலைமை வந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மோட்டார் அருகே அலட்சியமாக நிற்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?.. உங்களுக்குத்தான் இந்த பதறவைக்கும் வீடியோ.!