மோட்டார் அருகே அலட்சியமாக நிற்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?.. உங்களுக்குத்தான் இந்த பதறவைக்கும் வீடியோ.!
மனித உடல் உழைப்பு ஆற்றலை குறைவும், அவர்களின் எளிமையான அணுகுமுறைக்காகவும் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு, இன்றளவில் அவற்றின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், கரும்புச்சாறு பிழிவது முதல் பல்வேறு பொதுஇடங்களில் மோட்டார் சார்ந்த இயந்திரங்களின் பயன்பாடு என்பது இன்றளவில் அதிகம் உள்ளது.
இவ்வாறான மோட்டார் இயந்திரங்களின் இயக்கத்தின்போது, அதன் அருகில் நாம் நிற்காமல் இருப்பது நல்லது. நமது ஆடைகள் போன்றவை அதன் சுழற்சி சக்கரத்தில் சிக்குவது போல அருகில் நின்றாள், சில நேரம் விபரீதமும் ஏற்படலாம்.
அதற்கு சிறந்த உதாரணமாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது சேலை, சால் போன்றவற்றை பயன்படுத்தினால், அவை சக்கரத்தில் சிக்காதவாறு நம்முடன் இருக்கிறது என்பதை உறுதி செய்து வாகனத்தை இயக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஷாக்கிங் வீடியோ... "கட்டிப்புடி கட்டிப்புடிடா.." முதல்வர் அறையில் பெண் ஆசிரியையுடன் நெருக்கம்.!!
The importance of keeping loose clothes and hair away from equipment
— Science girl (@gunsnrosesgirl3) July 22, 2024
pic.twitter.com/Z0q7YwrTZW
ஒருவேளை அவ்வாறு அவை சக்கரத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டால், நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 1000 க்கும் மேற்பட்ட முறைகள் சுழலும் அதனுடன் நம்மால் ஈடு கொடுக்க இயலாமல் விபத்து அல்லது உயிரிழப்பு கூட நடக்கலாம். அப்படியான ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்ததன் வீடியோ வெளியாகியுள்ளது.
எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லாத வீடியோவில், பெண்மணி ஒருவர் மோட்டருக்கு அருகில் நிற்கிறார். எதிர்பாராத விதமாக அவரின் சேலை மோட்டாரில் சிக்கிக்கொள்ள, நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பினார். சேலை நொடிக்கும் குறைவான நேரத்தில் மோட்டார் சுழற்சியில் சிக்கிக்கொண்டது.
இதையும் படிங்க: "வாங்க ஏழைகளா.." 5,000 கோடி ரூபாய் செலவில் நடந்த சிக்கன கல்யாணம்.!! ஆனந்த் அம்பானி திருமணத்தின் ஷாக்கிங் புள்ளிவிவரம்.!!