53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
காபி, டீ குடிப்பதால் தலைவலி போகுமா.! மருத்துவர்களின் அறிவுரை என்ன.!?
பொதுவாக காபி, டீ குடித்தால் தலைவலி போகும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பதை இங்கே பார்ப்போம்?
காபி, டீ குடிப்பதால் தலைவலி குணமாகுமா?
காபி, டீ குடித்தால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். வேலைப்பளு மிகுந்த நேரங்களில் சூடாக காபி, தேநீர் அருந்தினால் தலைவலி சரியாவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஆனால் அது தலைவலியை நீக்குமா என்பது கேள்விக்குறியே! காபியில் உள்ள கஃபின் என்ற வேதிப்பொருள் தலைவலியை நீக்குவதற்கு உதவுகிறது. ஆனால் அது 40% மட்டுமே தலைவலியை போக்குவதற்கு உதவி புரிகிறது.
இதையும் படிங்க: பிஸ்கட் + டீ சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?.. உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை செய்தி.!!
டீ அருந்துவது அந்தநேரத்திற்கு புத்துணர்ச்சியை தருமே தவிர, அது தலைவலியை போக்காது. பால் ஒவ்வாமை உள்ளவர்கள், டயட்டில் உள்ளவர்கள், பால் சேர்க்காமல் கிரீன் டீ அல்லது பிளாக் டீ போன்ற தேநீர் வகைகளை குடிப்பது நல்லது. காபி எடுத்துக் கொள்ளும்போது ஒரு நாளுக்கு 150 முதல் 200 மில்லி கிராம் காபின் மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கப் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவர்களின் அறிவுரை
மேலும் இஞ்சி, ஏலக்காய் போன்ற பொருட்கள் சேர்த்து தேநீர் அருந்தினால் நல்ல மனமாகவும், சுவையாகவும் இருக்கும் தவிர, அது தலைவலியை போக்காது. இதனால்அதிகப்படியான டீ, காபியை சேர்த்துக் கொள்ளக் கூடாது. இது உடலில் மற்ற உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி.! அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிக்கும் நபரா நீங்கள்.? உங்களுக்கு தான் இந்த செய்தி.!?