பிஸ்கட் + டீ சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?.. உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை செய்தி.!!



Biscuit Tea is Dangerous 

 

இன்றளவில் வயது வித்தியாசமின்றி பலரும் சாப்பிடும் பிரதான உணவுகள் மற்றும் திரவ பொருட்கள் என்றால் அதில் பிஸ்கட் & டீ-க்கு பெரிய இடம் கிடைக்கும். ஏனெனில் வெளியூர்களில் பணியாற்றி வரும் நபர்களுக்கு இது ஒருவேளை உணவாகவும், நடுத்தர வர்க்கத்திற்கு ஒருநாளில் மாலை வேலைகளில் எடுத்துக்கொள்ளப்படும் சிற்றுண்டியாகவும் இருக்கின்றது. 

அதேபோல, முன்பெல்லாம் உறவினரை நேரில் பார்க்க சென்றால், அவர்களுக்கும்-அவர்களின் வீட்டில் இருக்கும் குழந்தைக்கும் பழங்கள், இனிப்புகளை வாங்கி செல்வார்கள். இன்றளவில், அந்த இடத்தினை பிஸ்கட் பிடித்துவிட்டது. ஒருசிலர் மொத்தமாக தங்களின் பேரப்பிள்ளைகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுக்கின்றனர். 

இதையும் படிங்க: தோசைக்கு சுவையான முட்டை குருமா.. செய்வது எப்படி?..!

health tips

உடல்நல எச்சரிக்கை

இந்நிலையில், டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவது மிகப்பெரிய தீமையை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். டீயில் இருக்கும் அதிகப்படியான கலோரிகள், உடல் எடையை வெகுவாக அதிகரிக்க உதவி செய்கிறது. மேலும், இரத்த சர்க்கரை, இரத்த கொதிப்பு போன்றவற்றையும் ஏற்படுத்தும். இது எதிர்காலத்தில் பக்கவாதம், இதய அடைப்பு, பற்கள் சிதைவு, பசியின்மை போன்றவற்றுக்கு வழிவகை செய்யும் எனவும் கருத்துக்களை கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அதிர்ச்சி.! காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள்.? இந்த நோய்கள் வரலாம்.!?