மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி.! அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிக்கும் நபரா நீங்கள்.? உங்களுக்கு தான் இந்த செய்தி.!?
குளிர்ந்த நீரை குடிப்பது நல்லதா?
பலரது வீடுகளிலும் வெயில் காலங்களில் வெயிலில் தாக்கத்தை குறைப்பதற்காக ஐஸ் வாட்டர் குடித்து வருகின்றனர். வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி தாகம் எடுக்கும் என்பதால் குளிர்ந்த நீர் சிறிதளவு குடிக்கலாம். ஆனால் குளிர்ந்த நீரை அதிகமான குளிர்ச்சியில் குடிக்கக்கூடாது. இவ்வாறு குடிப்பதால் உடலில் பலவிதமான நோய்களும், மூளைக்கு ஆபத்தையும் ஏற்படுத்துகிறது என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு குளிர்ந்த நீர் குடிப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று விளக்கமாக இப்பதிவில் பார்க்கலாம்?
குளிர்ந்த நீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
தொடர்ச்சியாக தினமும் குளிர்ந்த நீர் குடிப்பதால் சளி, தொண்டை வலி, மூக்கடைப்பு, தொண்டையில் புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் வேகத்தை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். அதிக குளிர்ச்சியாக தண்ணீர் அடிக்கடி குடிக்கும் போது பற்கள், ஈறுகள் வீக்கமடையலாம். இதனால் பல் வலி, ஈறுகளில் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இதையும் படிங்க: நோய் நொடிகளை விரட்டும் நெல்லிக்காய்.! என்னென்ன நோய்களை குணமாக்கும் தெரியுமா.!?
மேலும் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நெஞ்செரிச்சல், அல்சர், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது. குறிப்பாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் மூளையில் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது என்பதால் எப்போதும் அதிக குளிர்ச்சியான நீரை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
இதையும் படிங்க: தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து பாருங்க.!?