தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யும் பெருஞ்சீரகம்.. எப்படி பயன்படுத்தலாம்.!?



Benefits of eating Green fennel seeds

வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெருஞ்சீரகம்

பெரும்பாலும் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தபடும் பெருஞ்சீரகம், பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஹோட்டல்களில் உணவு சாப்பிட்டு வெளியில் வருபவர்களுக்கு இந்த சோம்பு என்று அழைக்கபடும் பெருஞ்சீரகத்தை தருவார்கள். இதற்கு காரணம் உணவு உண்ட பின்பு வாயில் துர்நாற்றம் அடிக்க கூடாது என்பதும், செரிமானத்திற்காகவும் தான். இந்த பெருஞ்சீரகத்தில் வேறு என்னென்ன நன்மைகள் உள்ளது என்று பார்க்கலாம்?

Fennel seeds

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

1. பெருஞ்சீரகத்தை பொடி செய்து தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பெருஞ்சீரக பொடியை கலந்து தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.
2. தலையில் வறட்சி, அரிப்பு, முடி உதிர்வு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் பெருஞ்சீரகத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வரலாம்.
3. வாய் துர்நாற்றம், ஈறுகளில் வீக்கம், வாய் புண் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் பெருஞ்சீரக பொடியை வைத்து பல் துலக்கி வரவும்.
4. செரிமான பிரச்சனை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் பெருஞ்சீரகத்தை தினமும் வெறும் வாயில்மென்று வந்தால் நோய் உடனடியாக குணமாகும்.
5. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இன்சுலின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் பெருஞ்சீரகத்தை அடிக்கடி உணவில் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க: நரம்பு பிரச்சனையை ஓட ஓட விரட்டும் ஏலக்காய்.! எப்படி பயன்படுத்தலாம்.!?

Fennel seeds

6. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால பிரச்சனைகளை சரி செய்து கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை உடைய பெருஞ்சீரகத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

இதையும் படிங்க: நோய் நொடிகளை விரட்டும் நெல்லிக்காய்.! என்னென்ன நோய்களை குணமாக்கும் தெரியுமா.!?