நோய் நொடிகளை விரட்டும் நெல்லிக்காய்.! என்னென்ன நோய்களை குணமாக்கும் தெரியுமா.!?



Health benefits of eating goose berry

நோய் நொடிகளை விரட்டும் நெல்லிக்காய்

பொதுவாக நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளை ஊட்டச்சத்தான உணவுகளாக தேர்ந்தெடுத்து உண்டு வந்தாலே நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். ஹோட்டல்களில் விற்கப்படும் துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணாமல் வீட்டில் சமைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்டு வந்தால் பலவிதமான நோய்களை குணப்படுத்தலாம். இதில் குறிப்பாக எல்லா சீசன்களிலும் கிடைக்கும் நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

Goose berry

ஊட்டச்சத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் நெல்லிக்காய்

நெல்லிக்காய் புளிப்பு சுவையில் இருப்பதால் பலரும் இதை விரும்பி உண்ணுவது இல்லை. ஆனால் இதில் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி ஊட்டச்சத்து மிகவும் அவசியமானது. இந்த வைட்டமின் சி ஊட்டச்சத்தின் முக்கிய ஆதாரமாக நெல்லிக்காய் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்களுக்கு குடித்து வந்தால்.! என்னென்ன நன்மைகள் தெரியுமா.!?

பருவ நிலைகளில் ஏற்படும் நோய்களான சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை வரவிடாமல் தடுத்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை நெல்லிக்காய் அதிகப்படுத்துகிறது. வயிற்று உப்புசம், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நெல்லிக்காய் சரி செய்கிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை முற்றிலுமாக குணப்படுத்துகிறது.

Goose berry

கண் பார்வை குறைபாட்டை சரி செய்யும்

இதில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் வயதானவர்கள் முதல் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பிரச்சனையை சரி செய்கிறது. நெல்லிக்காய் அதிக புளிப்பு சுவையில் இருப்பதால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு கடினமாக இருக்கும். அப்படியானவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து தேன் நெல்லிக்காயாக சாப்பிட்டு வரலாம். இது போக நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள், அதிக முடி உதிர்வு, அதிக எடை இருப்பவர்கள் போன்ற பலரும் நெல்லிக்காயை சாப்பிட்டு நல்ல பலன் பெறலாம்.

இதையும் படிங்க: 100% தீர்வு.! படுக்கையில் குதிரை பலம் பெற இதை கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.!?