நரம்பு பிரச்சனையை ஓட ஓட விரட்டும் ஏலக்காய்.! எப்படி பயன்படுத்தலாம்.!?



Health benefits of using cardamom

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏலக்காய்

பொதுவாக பலரது வீடுகளிலும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் அஞ்சறை பெட்டியில் பலவிதமான மசாலா பொருட்களை வைத்திருப்போம். இந்த மசாலா பொருட்கள் சமையலுக்காக மட்டுமல்லாமல் நம் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணப்படுத்தவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இதில் குறிப்பாக சமையலில் வாசனைக்காக பயன்படுத்தி வந்த ஏலக்காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. ஏலக்காயை பயன்படுத்தி என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம் என்பதையும், எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்தும் இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

​​​​​​

Cardamom

ஏலக்காயில் உள்ள ஊட்டசத்துகள் 

ஏலக்காயில் இரும்பு சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் பல நன்மைகளையும் ஏற்படுகிறது.

இதையும் படிங்க: நோய் நொடிகளை விரட்டும் நெல்லிக்காய்.! என்னென்ன நோய்களை குணமாக்கும் தெரியுமா.!?

புத்துணர்ச்சி அளிக்கும் ஏலக்காய் டீ

ஏலக்காயை தேநீராக தயாரித்து தினமும் குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். குழந்தை பெற்ற இளம் தாய்மார்கள் ஏலக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் ஏலக்காய் டீ, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக இருந்து வருகிறது.

Cardamom

மலச்சிக்கல் குணமாக

குறிப்பாக ஏலக்காயை பொடியாக தயாரித்து தேனுடன் காலை மாலை இருவேளைகளில் சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகளும் உடனடியாக குணமாகும். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காயை பொடி செய்து வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கி மலச்சிக்கல் சரியாகும்.

இதையும் படிங்க: மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்களுக்கு குடித்து வந்தால்.! என்னென்ன நன்மைகள் தெரியுமா.!?