மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி.! காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள்.? இந்த நோய்கள் வரலாம்.!?
டீ காபி பிரியரா நீங்கள்
பொதுவாக காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் தற்போது பலருக்கும் அதிகமாகி வருகிறது. குறிப்பாக டீ பிரியர்கள் தற்போதுள்ள காலகட்டத்தில் அதிகமாகி கொண்டே வருகின்றனர். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இவ்வாறு டீ, காபி குடிப்பது உடலுக்கு சுறுசுறுப்பை தரும் என்றாலும் இது உடலில் பல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக டீயுடன் பிஸ்கட்டையும் சேர்த்து சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும்.
நாம் சாப்பிடும் உணவுகள் ஒன்றோடு ஒன்று கலக்கும்போது அது நம் வயிற்றில் குறிப்பிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்று கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் பிஸ்கட் சேர்த்து சாப்பிடும் போது வயிற்றில் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றது என்று மருத்துவர்கள் அறிவுறுத்து வருகின்றனர். இதைக் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: இந்த நோய் இருப்பவர்கள் எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.? மருத்துவர்கள் எச்சரிக்கை.!?
டீயுடன் இந்த உணவு பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இருக்கும் போது டீயுடன் சேர்த்து பிஸ்கட், பிரட், கேக் போன்றவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் உண்ணுகின்றனர். ஆனால் இது நல்ல பழக்கம் இல்லை. இவ்வாறு வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. இதனால் காலப்போக்கில் நீரிழிவு பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் டீயுடன் சேர்ந்து வெறும் வயிற்றில் இருக்கும் போது காலையில் சமோசா, வடை போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களை உண்ணும் போது செரிமான பிரச்சனை, அல்சர், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது. எனவே ஆரோக்கியமுடன் நீண்ட நாள் வாழ்வதற்கு ஊட்டச்சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: CLEANING TIPS : பாத்ரூமில் உள்ள டைல்ஸ் அழுக்குகளை எளிதாக நீக்குவது எப்படி.!?