மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோசைக்கு சுவையான முட்டை குருமா.. செய்வது எப்படி?..!
எப்போதும் வீடுகளில் நாம் சமைக்கும் இட்லி-தோசை போன்ற உணவுகளுக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கறிக்குழம்பு, சாம்பார், காராமணி பயறுத் துவையல் உட்பட பல வகையான பொருட்களை வைத்து சாப்பிட்டு இருப்போம். சற்று வித்தியாசமாக இன்று முட்டை குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள். முட்டை குருமா 10 நிமிடத்தில் செய்வது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
சில்லு தேங்காய் - 4,
முந்திரி - 4,
சோம்பு - 1 ஸ்பூன்,
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு,
முட்டை - 2,
பிரிஞ்சு இலை, பட்டை தொகுப்பு - சிறிதளவு,
இதையும் படிங்க: குழந்தைக்கு அதிகமா நொறுக்கு தீனி கொடுக்குறீங்களா?.. ஆசையாக சாப்பிட்டு புற்றுநோயை வாங்கும் குழந்தைகள்.!!
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட தேங்காயை, முந்திரி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் கடுகு-உளுந்து சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
இவை நன்கு வதங்கியதும், அரைத்து வைத்த தேங்காய் - முந்திரியை சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும். அப்போதே உப்பு மற்றும் மசாலா ஆகியவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக நன்கு கொதிவந்ததும், அடுப்பை குறைத்து வைத்து முட்டையை உடைத்து சேர்த்து, முட்டை வெந்ததும் அதனை தோசை மற்றும் இட்லியுடன் சேர்த்து சாப்பிடலாம். விருப்பம் உடையோர் முன்பே முட்டையை தனியாக வானெலியில் வறுத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.
நன்றிCoowith Sajee
இதையும் படிங்க: வாவ்.. இது புதுசா இருக்கே.!! பருப்பு இல்லாமல் கமகமக்கும் சாம்பார்.!! சிம்பிள் ரெசிபி.!!