அடேங்கப்பா.. சாக்லேட்டில் இத்தனை ஸ்பூன் சர்க்கரையா சேர்த்திருப்பாங்க? இதுதெரியாம போச்சே.!



Chocolate Added with 37 g sugar equals the 5 More Spoons 


பன்முகத்தன்மை கொண்ட உலகில், வியாபாரம் என்பது மிகப்பெரிய அளவில் இருக்கிறது. கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒரு ரூபாய் ஷாம்புவில் தொடங்கி, நாம் ஆசையாக வாங்கி சாப்பிடும் மிட்டாய் முதல், பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கப்படும் உணவுகள், மசாலாக்கள் வரை நம்மை அறியாமலேயே நமது உடல்நலன் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. 

சாக்லேட்டுகள்

கடைகளில் விற்பனை செய்யப்படும் பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றில் சுவைக்காக சீனி உட்பட பல வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட கடைகளில் பிரதானமாக விற்பனை செய்யப்பட்ட எவரெஸ்ட் மசாலாவில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கூடுத ரசாயனங்கள் இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டது. 

அந்த வகையில், காதல் ஜோடிகள் என்றாலே முன்பெல்லாம் ரோஜா கொடுத்து சந்தித்த காலம் மலையேறி, இன்றளவில் அந்த ஒரு குறிப்பிட்ட சாக்லேட் வாங்கி கொடுக்கும் சூழல் வளர்ந்துவிட்டது. இதனை சிறுவயதுடைய குழந்தைகளும் அதிகம் வாங்கி விரும்பி சாப்பிடுகிறார்கள். சாக்லேட் தயாரிப்பில் பல பிராண்ட்கள் இருக்கின்றன. இவ்வாறான சாக்லேட் உற்பத்திக்கு சீனி, சாக்லேட் சிரப் உட்பட பல பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன.

இதையும் படிங்க: பரோட்டா மைதாவால் இவ்வுளவு பெரிய பாதிப்பா?.. மறந்தும் சாப்பிடாதீங்க.!

சர்க்கரை சேர்ப்பு

அதன்படி, வீட்டில் பொதுவாக நாம் சீனி சேர்த்து டீ, காபி குடிக்கும்போது ஒருசிலருக்கு ஒரு கரண்டி முதல் ஒன்றரை கரண்டி வரை எடுத்துக்கொள்ளும். அதே நேரத்தில், இரண்டு மூன்று கரண்டி என்றால் தித்திப்பு பாயசம் போல இருக்கும். இந்நிலையில், கடையில் விற்பனை செய்யப்படும் ஒரு சாலக்கெட்டில் 33 கிராம் சர்க்கரை சேர்ப்பதாக அதன் உற்பத்தி பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் கிட்டத்தட்ட 5 ஸ்பூன் சர்க்கரை பிடிக்கிறது. இதனை ஒருவர் செய்முறையாக எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நாம் சாப்பிடும் சாக்லேட்டில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவு இதுவாகும். அடிக்கடி டைரி மில்க் வாங்கி சாப்பிடுவோர், எதிர்காலத்தில் அதுசார்ந்த பிரச்சனையை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சாக்லேட் சாப்பிடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனினும், நாவை அடக்க இயலாதவர்கள் அதன் அளவு மீறாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

Note: மேற்கூறிய எக்ஸ் (ட்விட்டர்) வலைதள விடீயோவின் பேரில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குளிர்-மழை காலங்களில் பாலியல் ஆசை அதிகரிப்பது ஏன்? இதுதானா சங்கதி?.. தம்பதிகளே சில்லாக்கி-டும்.!