மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையோரங்களில் வளரும் இந்த செடியில் இவ்வளவு மருத்துவ குணங்களா.!?
சாலை ஓரங்களில் வளரும் மூலிகை
பொதுவாக மழைக்காலங்களில் சாலையோரங்களில் வளரும் பல வகையான செடிகளில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில் சாலையோரங்களில் வளரும் அம்மன் பச்சரிசி என்ற செடியில் பலவகையான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் உள்ளது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றன. இந்தச் செடியை குறித்தும், இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்தும் இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
அம்மான் பச்சரிசி செடியில் பெயர் காரணம்
மழைக்காலங்களில் சாலையோரங்களில் வளரும் அம்மான் பச்சரிசி செடி துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது. இதனை நம் முன்னோர்கள் கீரையாக சமைத்து உண்டு வந்தனர். அம்மான் பச்சரிசி செடியின் விதைகள் சிறு சிறு குருணை போல் இருந்ததால் பச்சரிசி என்றும் தாய்ப்பாலை பெருக்கும் மருத்துவ குணம் உள்ளதால் அம்மான் பச்சரிசி செடி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக இந்த மூலிகையில் டீ, காபி குடித்து பாருங்க.!
அம்மான் பச்சரிசி செடியில் உள்ள சத்துக்கள்
அம்மான் பச்சரிசி செடியில் யுபோர்பின் ஏ, பி, சி, பீட்டா அமைரின், கிளைக்கோசைடுகள், டெர்கிபின் ஆல்பா, பிரைடுளின், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி போன்ற பலவகையான ஊட்டச்சத்துகளும் நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளதால் இதை அடிக்கடி உணவில் பயன்படுத்த வேண்டும்.
என்னென்ன நோய்களை குணப்படுத்தும்?
உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் அம்மான் பச்சரிசி செடியை வாரத்திற்க்கு இருமுறை உணவில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உடலை குளிர்ச்சிப்படுத்தும். மேலும் வாய்ப்புண், அல்சர் போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது. சரும நோய்களான அலர்ஜி, ஒவ்வாமை போன்றவற்றையும் சரி செய்யும் மருத்துவ குணத்தை கொண்டுள்ளது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக அம்மான் பச்சரிசி செடி இருந்து வருகிறது. குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அம்மான் பச்சரிசி செடியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இதையும் படிங்க: வாயு தொல்லையா.! இந்த ஒரு இலை போதும்.. ஒரே நாளில் தீர்வு.!?