திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக இந்த மூலிகையில் டீ, காபி குடித்து பாருங்க.!
சீனி துளசி செடியின் பயன்கள்
தென் அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட சீனி துளசி என்ற செடி, மூன்று அடி வரை வளரும். களிமண் தரையில் மட்டுமே வளரும் சீனி துளசி செடியை வீடுகளில் தொட்டியிலும் வளர்க்கலாம். தமிழ்நாட்டில் பல இடங்களிலும், காடுகளிலும் இந்த செடியை அதிகம் பார்த்திருப்போம். இந்தச் செடியின் பூவை, தேன் பூ என்றும் கூறலாம். இந்த சீனி துளசி செடியில் பல வகையான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ பண்புகள் உள்ளது. இது குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
சீனி துளசி செடியில் உள்ள சத்துகள்
சீனி துளசி செடிகள் மக்னீசியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், மாங்கனிசு, இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த சீனி துளசி செடியின் இலை, பூ அனைத்துமே அருமருந்தாக இருந்து வருகிறது. சித்த வைத்தியத்தில் இந்த சீனி துளசி செடியை பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாயு தொல்லையா.! இந்த ஒரு இலை போதும்.. ஒரே நாளில் தீர்வு.!?
நீரிழிவு நோயாளிகளுக்கு சீனி துளசி
மேலும் நீரிழிவு நோயாளிகள் தினமும் டீ, காபி போன்றவற்றில் சர்க்கரைக்கு பதிலாக இந்த சீனி துளசி செடியின் இலைகள் மற்றும் பூக்களை சேர்த்து குடித்து வரலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இன்சுலினை சுரக்க வைக்கிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த சீனி துளசி செடியின் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறிவிடும்.
வேறு என்னென்ன நோய்களை குணப்படுத்தும்?
மேலும் வாய் புண், வாய் துர்நாற்றம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், அல்சர் போன்ற பிரச்சனைகளையும் உடனடியாக சரி செய்கிறது. வயிற்றுப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள் இந்த சீனி துளசி செடியின் இலைகளை மென்று தின்று வந்தால் உடனடியாக வயிற்றுப்போக்கு சரியாகும். ஜப்பானியர்கள் வயிற்று உப்புசம் பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த சீனி துளசி செடியின் இலைகளை பொடி செய்து உணவில் சேர்த்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சருமம் தங்கமாக ஜொலிக்க வெல்லத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.!?