திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாயு தொல்லையா.! இந்த ஒரு இலை போதும்.. ஒரே நாளில் தீர்வு.!?
முன்னோர்களின் நோய்களை தீர்க்கும் மருந்துகள்
பொதுவாக நம்மை சுற்றி இருக்கும் சுற்றுச்சூழலில் பல வகையான மரங்கள் செடிகள், கொடிகள் என நிறைந்துள்ளன. இவற்றில் பல செடிகளும் மரங்களும், கொடிகளும் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. இது குறித்து நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நம் முன்னோர்கள் பலவிதமான நோய்களுக்கும் இவ்வாறு சுற்றுச்சூழலில் இருக்கும் மரங்கள், செடிகள், கொடிகளை வைத்து மருந்துகள் தயாரித்து பயன்படுத்தி வந்தனர்.
இந்த மருந்துகளும் பக்கவிளைவுகள் இன்றி நோய்களை குணப்படுத்தியது. இதன்படி, வாயு தொல்லையை எளிதாக குணமாக்க குரங்கு வெற்றிலை என்ற இலை போதும். இந்த இலையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும், வேறு என்னென்ன நன்மைகள் என்பதை குறித்தும் பார்க்கலாம்?
இதையும் படிங்க: ரோட்டோரத்தில் வளரும் மூக்குத்தி பூச்செடியில் இவ்வளவு மருத்துவ குணங்கள்.!?
குரங்கு வெற்றிலை அல்லது குருவி வெற்றிலை
குரங்கு வெற்றிலை அல்லது குருவி வெற்றிலை என்று அழைக்கப்படும் இந்த செடியை கிராமப்புறங்களில் அல்லது நகர்புறங்களில் ரோட்டோரங்களில் அதிகமாக பார்க்கலாம். புதர் போன்று வளரும் இந்த செடியின் இலையுடன் கிலுவ மரத்து செடியின் இலையை சேர்த்து மென்று வந்தால் வெற்றிலை போட்டது போல் வாய் சிவப்பாக இருக்கும். மேலும் இந்த குரங்கு வெற்றிலை சீதபேதி, வயிற்றுப்போக்கை சரி செய்கிறது.
குரங்கு வெற்றிலையின் பயன்கள்
குறிப்பாக இந்த குரங்கு வெற்றிலை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நாள்பட்ட இருமல் சரியாகும். குழந்தை பெற்ற பெண்கள் குரங்கு வெற்றிலை இலை, வேர், பூ என அனைத்தையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். இச்செடியின் வேர்கள் விஷ முறிவு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குரங்கு வெற்றிலை செடியின் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் வாய் தொல்லை ஒரே நாளில் சரியாகிவிடும்.
இதையும் படிங்க: தைராய்டு பிரச்சனையா.! சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க போதும்.!?