எப்போதும் ஒரே வகை சட்னியை சாப்பிட்டு சலித்து விட்டதா?! இதை டிரை பன்னுங்க..அசத்தலா இருக்கும்.!
பொதுவாக இட்லி, தோசைக்கு சாம்பாரை விட சட்னி தான் சுவையாக இருக்கும். ஆனால், தினமும் ஒரே சுவையில் சட்னி சாப்பிடுவது சலித்து விடும். அதற்கு பதிலாக, வித்தியாசமான சுவையிலும் அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இஞ்சி சட்னி எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி - 2 துண்டு ( நறுக்கியது )
பூண்டு - 5 பல்
புளிக் கரைசல் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
காஷ்மீர் மிளகாய் - 5
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெல்லம் - சிறிது
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியை வைக்கவும். அதில், 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் நறுக்கிய இஞ்சி 2 துண்டு மற்றும் பூண்டு 5 பல் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: வாயில் எச்சில் ஊறும் சுவையில் இஞ்சி ஊறுகாய்..! கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..! உடனே இந்த ரெசிபியை நோட் பண்ணுங்க...
பின்னர், அதே வாணலியில் மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, காஷ்மீர் மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிரமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது, இவைகள் அனைத்தையும் ஒரு மிக்சி கப்பில் சேர்த்து அதோடு இரண்டு தேக்கரண்டி புளிக் கரைசல், சிறுது வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு, வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கருவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்தால் சுவையான, ஆரோக்கியமான இஞ்சி சட்னி தயார்.
இதையும் படிங்க: வாழ்க்கையில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்..! நரகமாக மாற்றி விடும்..!