பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
புதினா சாதம் & சேனைக்கிழங்கு பொரியல்; சுவையாக செய்து அசத்துவது எப்படி?.. டிப்ஸ் உள்ளே.!
உடலுக்கு பல்வேறு சத்துக்களை வாரி வழங்கும் குணத்தை புதினாவும், சேனைக்கிழங்கு கொண்டுள்ளது. இன்று சுவையான புதினா சாதத்துடன் சேனைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள். இரண்டும் சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.
புதினா சாதம் செய்யத் தேவையான பொருட்கள்
புதினா - 2 கையளவு,
இஞ்சி - 1/2 இன்ச் அளவு,
பூண்டு - 5,
பட்டை, கிராம்பு - தலா 1,
பச்சை மிளகாய் - 4,
இதையும் படிங்க: சுவையான அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?..!
தாளிக்க
கடுகு-உளுந்து - சிறிதளவு,
கடலைப்பருப்பு - 3 கரண்டி,
முந்திரி பருப்பு - 5,
வரமிளகாய் - 3,
சீரகம் - 1 கரண்டி,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு
புதினா சாதம் செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட புதினாவை நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை மிக்சியில் இஞ்சி, பூண்டு, பட்டை-கிராம்பு, பச்சை மிளகாய் ஆகிய பொருட்கள் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவற்றை அரைத்தபின், வானெலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கருகிவிடாமல் மிதமான தீயில் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். இவை முறுவலான நிறத்திற்கு வந்ததும், அரைத்து வைத்துள்ள புதினாவை சேர்த்து 10 - 15 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.
பின் ஏற்கனவே வடித்து வைத்துள்ள சாதத்தை, அரைத்து வானெலியில் தயார்படுத்தி வைத்துள்ள புதினவுடன் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான புதினா சாதம் தயார்.
சேனைக்கிழங்கு வறுவல் செய்யத் தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு - 300 கிராம்,
புளி - சிறிதளவு,
உப்பு - சிறிதளவு,
குழம்பு மிளகாய் தூள் - 1 கரண்டி,
தனி மிளகாய் தூள் - 1 கரண்டி அல்லது காரத்திற்கேற்ப
அரிசி மாவு - 1 கரண்டி,
இஞ்சி பூண்டு விழுது - 1/4 கரண்டி,
எலுமிச்சை சாறு - 1/2 கரண்டி,
பூண்டு - 3,
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட சேனைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து, சிறிது சிறிதாக அரிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை நீரில் சேர்த்து சிறிதளவு புளியுடன் 75% அளவு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம். ஒருசிலருக்கு சேனைக்கிழங்கு நாவில் அரிப்பை உண்டாக்கும் என்பதால், புளி சேர்த்துக்கொள்ள வேண்டும். வேகவைத்து நீர் இல்லாமல் சேனைக்கிழங்கை எடுத்து, அதனுடன் மேற்கூறிய குழம்பு மிளகாய்தூள், தனிமிளகாய் தூள், அரிசி மாவு, இஞ்சிபூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பிசைந்துகொள்ள வேண்டும்.
பின் வானெலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் பிசைந்து வைத்துள்ள கிழங்கை சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சிறிது சிறிதாக எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். இறக்கும் தருவாயில் 2 பூண்டை நசுக்கி சேர்த்தால் சுவைப்பட சேனைக்கிழங்கு பொரியல் தயார்.
தகவல் நன்றிTodays Samayal
இதையும் படிங்க: சுவையான, ருசியான, கமகமக்கும் பிரியாணி செய்ய ஆசையா? அசத்தல் டிப்ஸ் இதோ.!