சுவையான, ருசியான, கமகமக்கும் பிரியாணி செய்ய ஆசையா? அசத்தல் டிப்ஸ் இதோ.!



How to make better Biryani

இன்றளவில் பலருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாக இருக்கும் பிரியாணியை, பலரும் தரமாக செய்து சாப்பிட வேண்டும் என விரும்புகின்றனர். இவ்வாறானவர்களுக்கான சில குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். 

எண்ணெய், நெய் இரண்டு சமமான அளவில் சேர்க்கப்பட்டால் பிரியாணி சாப்பிட திகட்டாமல் இருக்கும். நெய் மட்டும் தனியாக சேர்த்தால் திகட்டல் இருக்கும். எண்ணெய் மட்டும் சேர்த்து பிரியாணி சமைத்து கமகமவென வாசனையை வழங்காது.

பிரியாணியில் ஈரல் இல்லாத இறைச்சி நல்லது. ஈரல் இருந்தால் பிரியாணியின் ருசி குறையும். சிக்கன் பிரியாணிக்கு ஏலம், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டாம். சிக்கன் பிரியாணியில் தயிர் சேர்க்கலாம், மட்டனில் தேங்காய்ப்பால் சேர்த்து சமைக்கலாம். 

இதையும் படிங்க: சுவையான புதினா பன்னீர் புலாவ் செய்வது எப்படி?.. டிப்ஸ் உள்ளே.!

இறால் பிரியாணிக்கு கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவை சேர்க்கக்கூடாது. கறிவேப்பில்லை மட்டுமே சேர்க்கலாம். குக்கரில் பிரியாணி செய்வோர், மூடியை மூடுவதற்கு முன்னதாக சிறிது எண்ணெய் விட்டு கிளற, பிரியாணி உதிரியாக குழையாமல் வரும்.

cooking tips

புதிதாக பிரியாணி செய்வோர், பிரியாணியை உதிரியாக பெற, சாதத்தை வடித்து கிரேவியுடன் கலந்தும் பரிமாறலாம். பசுமதியை வேகவைத்து வடிக்கும்போது, அதனுடன் ஒரு கரண்டி எண்ணெய் விட சாதம் ஒன்றொன்று ஒட்டாது. 

பிரியாணியை தம் போடுவது ருசியை அதிகப்படுத்தும். அடுப்பு மேல் தோசைக்கல் வைத்து, பின் இறுக்க மூடி பாத்திரத்தை வைத்து தம் போடலாம். புலாவ் செய்வதற்கு அரிசி அரைவேக்காடு நிலையில் இருக்க வேண்டும். பிரியாணி என்றால் முக்கால் வேக்காடு இருக்க வேண்டும். 

இறைச்சியை சேர்த்த பின்னரே இஞ்சி-போன்று விழுதை சேர்த்து வதக்க வேண்டும். முன்னதாகவே அதனை சேர்த்தால், பாத்திரத்தில் ஒட்டும். பிரைடு ரைஸ் செய்வோர் ஒரு கப் அரிசிக்கு அரை கப் நீரும், பிரியாணிக்கு 2 கப் நீரும் வைக்க வேண்டும். பிரியாணி மணக்க மசாலாவை அரைத்து பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: ஆந்திரா ஸ்டைலில் அசத்தல் புளியோதரை; செய்வது எப்படி?..!