சுவையான அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?..!
அன்றாடம் நாம் நமது உணவுகளில் காய்கறிகளை கட்டாயம் சேர்த்துக்கொள்வது, நமது உடல் நலனுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை வழங்கும். தினமும் நாம் செய்யும் பணிகளால் உடலில் இருந்து இழக்கப்படும் சத்துக்கள், காய்கறிகள் சாப்பிடுவதால் கிடைக்கிறது. இன்று சுவையான அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்
அவரைக்காய் - கால் கிலோ,
வெங்காயம் - 2,
பூண்டு - 4,
கடுகு-உளுந்து - சிறிதளவு,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
மஞ்சள் பொடி - சிறிதளவு,
துருவிய தேங்காய் - அரை கப்,
பச்சை மிளகாய் - 2,
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், அவரைக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பூண்டை தட்டிவைக்கவும்.
இதையும் படிங்க: சுவையான புதினா பன்னீர் புலாவ் செய்வது எப்படி?.. டிப்ஸ் உள்ளே.!
பின் வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பில்லை அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கியபின், அவரைக்காயை இட்டு வதக்க வேண்டும். அவரைக்காய் வதங்கும்போதே சிறிது சிறிதாக உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். விருப்பம் இருப்பவர்கள் லேசாக குழம்பு மசாலையும் தூவிக்கொள்ளலாம்.
அவரைக்காய் வதங்க தொடங்கியதும், துருவிய தேங்காயை சேர்த்து சில நிமிடங்கள் இதனை வதக்கி எடுத்தால் சுவையான அவரைக்காய் பொரியல் தயார்.
இதையும் படிங்க: ஆந்திரா ஸ்டைலில் அசத்தல் புளியோதரை; செய்வது எப்படி?..!