குழந்தைகளுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகில் பூரி செய்து அசத்துவது எப்படி?.. வாங்க பார்க்கலாம்..!!



how to prepare ragi poori

குழந்தைகளுக்கு பூரி என்றால் கொள்ளை பிரியம்தான். அதிலும் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் கேழ்வரகில் பூரி செய்துகொடுத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பூரியை குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள் என்பதால் அவர்களுக்கு வித்தியாசமான முறையில் சத்துக்களை வழங்கும்.

தேவையான பொருட்கள் : 

கோதுமை மாவு - அரை கப்  
கேழ்வரகு மாவு - அரை கப் 
ஓமம் - சிறிதளவு 
சூடுபடுத்திய தண்ணீர் - அரை கப் 
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட பாத்திரத்தில் கேழ்வரகு, கோதுமை மாவு, எண்ணெய், உப்பு, ஓமம் சேர்த்து நன்றாக அதனை கலந்துகொள்ள வேண்டும். 

★பின்னர் சூடான தண்ணீரை மாவில் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு அதனை பிசைந்து அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். 

★இதன் பின்னர் பூரிக்கட்டையால் கேழ்வரகு கலவையை உருட்டி, தேய்த்து அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும், எண்ணெயில் போட்டு எடுத்தால் சுவையான கேழ்வரகு பூரி தயார். இதற்கு நாம் வழக்கமாக சாப்பிடுவது போல பூரிகிழங்கு வைத்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.