தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
சுவையான கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி? இல்லத்தரசிகளே டிப்ஸ் இதோ.!
உடலுக்கு நன்மைகளை வழங்கும், சுவையான கடலைக்கறி செய்வது எப்படி என இன்று தெரிந்துகொள்ளலலாம். சுண்டல் கடலையை மாறுபட்ட சுவையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
கடலைக்கறி செய்யத் தேவையான பொருட்கள்
கறுப்பு கொண்டைக்கடலை - 150 கிராம்,
வெங்காயம் - 3,
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 5,
மிளகாய்த் தூள் - 2 கரண்டி,
மஞ்சள் தூள் - 1 கரண்டி,
கரம் மசாலா தூள் - 1 கரண்டி,
தனியா - 1 கரண்டி,
தேங்காய் - கால் அல்லது அறை முறி,
கடுகு - 1 கரண்டி,
சீரகம் - அரை கரண்டி,
புளி - சிறிதளவு,
இதையும் படிங்க: மழைக்கு நடுவே குட்டியுடன் அடைக்கலம் தேடிய நாய்; வைரலாகும் மனம் நெகிழவைக்கும் வீடியோ.!
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட கொண்டைக்கடலையை சுமார் 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின் தேங்காய், காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை கடாயில் வறுத்து, அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் தக்காளி சேர்க்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும் மசாலா வகைகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பச்சை வாசனை போனதும், புளி சேர்க்க வேண்டும்.
லேசான கொதி வந்ததும் ஏற்கனவே உப்பு சேர்த்து வேகவைத்து, எடுத்து வைத்துள்ள கடலையை சேர்த்து கொதிக்க விடவேண்டும். பின், அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிட்டால், சுவையான கடலைக்கறி தயார். இதனை கட்டியாகும் வரை கொதிக்கவிட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
புட்டு, இடியப்பம், சோறு, தோசை ஆகியவற்றுக்கு இது சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க: டீ, காபி விரும்பிகளே.. காலை எழுந்தவுடன் இதை மட்டும் மறக்காம செஞ்சிடுங்க..!