டீ, காபி விரும்பிகளே.. காலை எழுந்தவுடன் இதை மட்டும் மறக்காம செஞ்சிடுங்க..!



do this regularly before drinking tea coffee

காலை நேரத்தில் எழுந்ததும், பல் துலக்கி விட்டு டீ, காபி குடிப்பது இன்றளவில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய விருப்பமான விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. அதேபோல, வெளியூர்களில் வேலை காரணமாக தங்கி இருந்து பணிகளை மேற்கொண்டு வரும் நபர்களுக்கு காலை உணவாகவும் டீ மற்றும் வடை போன்றவை இருக்கிறது. 

கைவிட இயலாத பழக்கமாகியது

டீ, காபி குடிக்கும் பழக்கம் தவறானது எனினும், அதனை அளவுடன் வைத்துக்கொண்டால் உடலுக்கு பிரச்சனை இல்லை. ஆனால், பலரிடமும் டீ-காபி பழக்கம் பிரிக்கமுடியாத வகையில் ஒன்றிப்போனதால், பலராலும் அதனை கைவிட முடியவில்லை.

இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பட்டை.. வேறு என்னென்ன நன்மைகள்.!?

health tips

டீ-க்கு முன் நீர் குடியுங்கள்

இதனை குடிப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்பது இருக்கிறது. அதாவது, வெறும் வயிற்றில் டீ குடிப்பதற்கு முன்னதாக, ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு முன்பு, ஒரு டம்ளர் அளவு தண்ணீரை குடிப்பதன் மூலமாக நமது உடலில் வாயு, நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை குறைக்க வழிவகை செய்யும். 

உடல் பிரச்சனைகளை தவிர்க்க

எப்போதும் வெறும் வயிற்றுடன் டீ-காபி குடித்துக் கொண்டு இருந்தால், வயிற்றில் புண்கள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகப்படும். மேலும், டீ, காபி குடிப்பதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படாமல் உடல்நலம் பாதுகாக்கப்படும். டீ, காபியில் இருக்கும் டாப்பின் எனும் வேதிப்பொருள், நமது பற்களின் மீது அடுக்கை ஏற்படுத்தி வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். இந்த பிரச்சனையை நாம் தவிர்க்க வேண்டும் என்றால் டீ குடிப்பதற்கு முன்பு சிறிதளவு தண்ணீர் குடிப்பது நல்லது.

இதையும் படிங்க: உயரத்தை அதிகரிக்கச் செய்யும்.. 5 உணவுகள்.. ஒரே மாதத்தில் கண்கூடாக வளர்ச்சியை காணலாம்.!