96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
செரிமான பிரச்சனை முதல்.. உடல் எடை அதிகமாவது வரை.! பல நோய்களை தீர்க்கும் நெல்லிக்காய் ஜூஸ்.!?
நோய் எதிர்ப்பு சக்தியை தரும் நெல்லிக்காய்
பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காயை சிறந்த மருந்தாக கருதி வருகின்றனர். ஊட்டச்சத்து நிறைந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆக்சிஜனேற்றங்கள் போன்ற பல வகையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கிறது. இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், தொற்று எதிர்ப்பு பண்புகள் பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் அலர்ஜி, ஒவ்வாமை போன்றவற்றை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மேலும் தலை முதல் கால் வரை உள்ள உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை தரும் அமிர்தமாக நெல்லிக்காய் இருந்து வருகிறது. இந்த நெல்லிக்காயை ஜூஸாக தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கிறது. இதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
இதையும் படிங்க: இந்த நோய் இருப்பவர்கள் சப்பாத்தி சாப்பிடுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.! ஏன் தெரியுமா.!?
நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
1. தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட்டு நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கிறது.
2. இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
3. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பாக நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும்.
4. நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலம் மேல் எழும்புதல் போன்ற பிரச்சனைகளையும் எளிதாக குணப்படுத்துகிறது.
5. நெல்லிக்காய் ஜூஸ் குடித்த வந்தால் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து மலச்சிக்கலை எளிதாக நீக்குகிறது.
6. முடி உதிர்வு, பொடுகு தொல்லை போன்ற பிரச்சினைகள் அதிகமாக இருப்பவர்களும் நெல்லிக்காய் ஜூஸை தாராளமாக குடித்து வருவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.
7. உடலில் பல்வேறு பாகங்களுக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்கி நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.
8. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் ஒரு வரப் பிரசாதமாக இருந்து வருகிறது.
9. உடல் எடை குறைய விரும்புபவர்கள் தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.
இதையும் படிங்க: அஜீரண கோளாறை ஒரே நாளில் விரட்டி அடிக்கும் சித்த வைத்திய பொடி.!?