அஜீரண கோளாறை ஒரே நாளில் விரட்டி அடிக்கும் சித்த வைத்திய பொடி.!?



These powder help to reduce digestive problems

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் போதுமான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைக்காமல் பல விதமான நோய் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றோம். இதற்கு அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அதிகமாக உண்பதுமே காரணமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட உணவுகளை அதிகமாக உண்ணும் போது அஜீரண கோளாறு ஏற்பட்டு காலப்போக்கில் மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, குடல் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது.

Digestive problems

செரிமான பிரச்சனையை சரி செய்யும் ஜீரண பொடி

இத்தகைய பிரச்சினைகளை எளிதில் ஆங்கில மருந்து எடுத்துக் கொண்டு சரி செய்ய முடிந்தாலும், இவை நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு பக்க விளைவுகள் இன்றி அஜீரண கோளாறை எளிதில் சரி செய்ய இந்த சித்த வைத்திய ஜீரண பொடியை பயன்படுத்தி பாருங்க. ஒரே நாளில் நல்ல பலன் தரும்.

இதையும் படிங்க: தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து பாருங்க.!?

ஜீரணப்பொடி

செய்ய தேவையான பொருட்கள்:-சுக்கு, மிளகு, சீரகம், வசம்பு, ஓமம், இந்துப்பு

செய்முறை

சுக்கு மிளகு, சீரகம், வசம்பு, ஓமம் போன்றவற்றை நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து அரைத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியை காற்று போகாத ஒரு டப்பாவில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும்.

Digestive problems

இதனை மதிய உணவு மற்றும் இரவு நேர உணவிற்கு முன்பாக இரண்டு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டு வரலாம் அல்லது இந்த பொடியை சுடுதண்ணீரில் கலந்தும் குடிக்கலாம். இவ்வாறு தினமும் குடித்து வர செரிமான பிரச்சனை உடனடியாக சரியாகும் என்று சித்த வைத்தியம் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய இந்த 4 சைவ உணவுகளை சாப்பிட்டு பாருங்க.!?