இந்த நோய் இருப்பவர்கள் சப்பாத்தி சாப்பிடுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.! ஏன் தெரியுமா.!?



Disease caused by eating chapathi at night dinner

சப்பாத்தியை இரவு உணவாக சாப்பிடலாமா

பொதுவாக தற்போது உள்ள காலகட்டத்தில் உணவு பட்டியலில் முக்கிய உணவாக சப்பாத்தி இருந்து வருகிறது. குறிப்பாக இரவு உணவு என்றாலே பெரும்பாலும் பலரது வீட்டிலும் சப்பாத்தி தான். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் போன்ற பலரும் சப்பாத்தியை உணவாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் ஒரு சில நோய் இருப்பவர்கள் சப்பாத்தியை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்து வருகின்றனர். இதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்

Chapathi

யார் யார் சப்பாத்தி சாப்பிடக்கூடாது

சப்பாத்தியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் குறிப்பாக வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பி3,  வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாக சாப்பிடலாம். ஆனால் சப்பாத்தியில் கலோரிகள் நிறைந்திருப்பதால் கார்போஹைட்ரேட் உடலில் அதிகமைடைந்து உடல் எடை அதிகமாகும். எனவே சர்க்கரை நோயாளிகள் சப்பாத்தியை இரவில் உணவாக எடுத்துக் கொள்ளும் போது அதிகமாக நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: 50 வயதிலும் இளமையாக துள்ளி குதிக்க இந்தக் கீரையை மட்டும் சாப்பிட்டு பாருங்க.!?

Chapathi

சர்க்கரை நோயாளிகள் சப்பாத்தி சாப்பிடலாமா

குறிப்பாக நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் மற்றும் பிசிஓடி பிரச்சனை இருப்பவர்கள் சப்பாத்தியை உணவில் சேர்த்துக் கொள்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இது உடலில் சர்க்கரையின் அளவை அதிகரித்து நோய் பாதிப்பை தீவிரப் படுத்துகிறது. மேலும் இத்தகைய பிரச்சினை இருப்பவர்களுக்கு சப்பாத்தி எளிதாக ஜீரணம் ஆகாமல் குடல் பகுதியில் பிரச்சனை ஏற்படும். மேலும் இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலச்சிக்கல், குடல் புண், செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனைகள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் தோசைக்கு புளி சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! சுவை வேற லெவலில் இருக்கும்.!?