இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
உயிருக்கே உலை வைக்கும் பாமாயில்.. இவ்வளவு ஆபத்துக்கள் நிறைந்ததா.?!

பாமாயில் எண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், தெரு உணவு கடைகளில் தாயாரிக்கப்படும் துரித உணவுகளில் பாமாயில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பேக்கரி கடைகளில் தயாரிக்கப்படும் கேக்குகளிலும் பாமாயில் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, நமக்கு தெரியாமலேயே பாமாயிலில் தயாரிக்கப்பட்ட உணவுகளை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது இதயத்தின் தமனிகள் மூடிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், பாமாயில் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் நிறைவுற்ற கொழுப்புகளில் நிறைந்த உணவுகள் மற்றும் நிறைந்த எண்ணெய். பெரும்பாலும், கல்லூரி கேன்டீன்களில் தயாரிக்கப்படும் போண்டா, வடை மற்றும் நூடுல்ஸ் போன்ற உணவுகள் பாமாயில் எண்ணெய் கொண்டே தயாரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய்கள் ஏற்படும்.
இதையும் படிங்க: அக்கா நீங்க ஐடியா மணிதான் போங்க.. தட்டை வீணாக்காமல் இட்லி சாப்பிவது எப்படி? சூப்பர் டெக்னீக் வீடியோ வைரல்.!
பாமாயிலில் சுமார் 50 சதவீதம் கொழுப்புகள் உள்ளது. இவை, குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோடீன் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். மேலும் இந்த கெட்ட கொழுப்பு ட்ரைகிளிசரைட்களை அதிகரிக்கிறது. இதனால், இதய நோய்கள் குறிப்பாக மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும், ஆரோக்கியமான எண்ணெய் வகைகளான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இருப்பினும், எந்த எண்ணெய் வகையானாலும் அதிக அளவு இல்லாமல் போதிய அளவு உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
அதனைவிடுத்து எண்ணெய் வகைகளை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: பயணத்தின் போது வாந்தியா.? அதை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ.!