#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குட்டீஸுக்கு பிடித்த கபாப்.. சிம்பிளாக தோசை கல்லில் பன்னீர் கபாப் செய்யலாம் வாங்க.!
பன்னீரில் புரோட்டீன் அதிகம் உள்ளது. குறிப்பாக பன்னீரில் கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகையால், பன்னீர் சாப்பிடுவதால் எலும்பு வலுவடையும். அதுமட்டுமல்லாமல், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இப்போது, இந்த பன்னீரை பயன்படுத்தி குட்டீஸ்களுக்கு பிடித்த பன்னீர் கபாப் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
பன்னீர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 ( சதுர வடிவில் நறுக்கியது)
குடை மிளகாய் - 1 ( சதுர வடிவில் நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிது
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி இஞ்சி, பூண்டு விழுது, தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், உப்பு தேவையான அளவு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது, இந்த கலவையில் மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி பன்னீர், நறுக்கிய வெங்காயம் மற்றும் குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இதையும் படிங்க: முருங்கைக் கீரையுடன் முட்டை.. இப்படி பொரியல் செய்தால்.. எல்லோருக்கும் பிடிக்கும்.!
பிறகு, அடுப்பைப் பற்ற வைத்து அதில் தோசை கல்லை வைக்கவும். அது சூடானதும், பல் குத்தும் குச்சியை பயன்படுத்தி குடை மிளகாய், பன்னீர், வெங்காயம் என குத்தி விட்டு தோசை கல்லில் சேர்த்து திருப்பி விட்டு வேக வைத்து எடுத்தால் சூடான, சுவையான பன்னீர் கபாப் தயார்.
இதையும் படிங்க: வாழ்க்கையில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்..! நரகமாக மாற்றி விடும்..!