"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
முருங்கைக் கீரையுடன் முட்டை.. இப்படி பொரியல் செய்தால்.. எல்லோருக்கும் பிடிக்கும்.!
பொதுவாக முருங்கை கீரையை அனைவரும் விரும்புவது இல்லை. ஆனால், முருங்கை கீரையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. குழந்தைகளுக்கு முருங்கை கீரையை வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் . அத்தகைய, முருங்கை கீரையை சுவையாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையானப் பொருட்கள் :
முருங்கை கீரை - 1 கப்
கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுந்து - 1 தேக்கரண்டி
சின்ன சீரகம் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 5 (பல்)
மிளகு தூள் - சிறிது
முட்டை - 3
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைக்கவும். அதில் 2 தேக்கரண்டி கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் மேலே கொடுக்கப்பட்ட அளவுகளின் படி கடுகு, வெள்ளை உளுந்து மற்றும் சின்ன சீரகம் சேர்த்து பொறிந்ததும் 2 பச்சை மிளகாய், 2 காய்ந்த மிளகாய் மற்றும் தட்டி வைத்த 5 (பல்) பூண்டு சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்பு, மேலே கொடுக்கப்பட்ட அளவுகளின் படி சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் 1 கப் முருங்கை கீரை சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
இதையும் படிங்க: தூக்கமின்மையை சரி செய்ய மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த 5 பழங்கள் போதும்.!?
பின்பு, மற்றொரு கிண்ணத்தில் 3 முட்டையை உடைத்து ஊற்றி அதில் சிறிது மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். இப்போது, முருங்கை கீரையில் முட்டை கலவையை சேர்த்து அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
முருங்கை கீரை பொரியல் நன்றாக உதிரியாக மாறும் நேரத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி விட வேண்டும். இப்போது சூடான, சுவையான முருங்கை கீரை பொரியல் தயார்.
குறிப்பு :
இவ்வாறு வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இதே போல் சுவையாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படிங்க: நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை மலர்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா.!?