"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
பெண்களே.! உங்கள் அந்தரங்க பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா.! உடனடி தீர்வு..
அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியம்
பொதுவாக ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் அந்தரங்க உறுப்பில் அரிப்பு ஏற்படுவது என்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் இதுவே தொடர்ச்சியாக அந்தரங்க பகுதியில் அரிப்பு இருந்து வந்தால் பல நோய்களுக்கு காரணமாக இருக்கும். எனவே உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது. எப்போதும் அந்தரங்கப் பகுதியை சுகாதாரமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். சுகாதாரம் மட்டுமில்லாமல் அந்தரங்கப் பகுதி அரிப்புக்கு ரேஸர் பர்ன், காண்டக்ட் டெர்மடிடிஸ், சிறுநீர் பாதை தொற்று, பாலியல் நோய்கள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
மேற்க்குரிய காரணங்கள் எதுவென கண்டறிய உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதித்து அதற்குரிய மருந்துகள் எடுத்து கொள்வது மிகவும் நல்லது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புகளை உடனடியாக குணப்படுத்த ஒரு சில வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி சரி செய்யலாம். இது குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
இதையும் படிங்க: புடலங்காயை 12 நாட்களுக்கு தொடர்ந்து இப்படி சாப்பிட்டு பாருங்க.! இவ்வளவு நோய்களை குணப்படுத்துமா.!?
அந்தரங்க
பகுதி அரிப்பை சரி செய்யும் வீட்டு வைத்திய முறைகள்
1. சுத்தமான துணியில் சில ஐஸ் கட்டிகளை எடுத்து அந்தரங்க பகுதியில் அரிப்பு ஏற்படும் இடத்தில் வைத்து சில நொடிகளுக்கு தேய்த்து வரவும்.
2. ஒரு கப் தண்ணீரில் ஒரு மூடி ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து அந்தரங்க பகுதியில் ஒரு நாளுக்கு இரண்டு முறை கழுவி வர வேண்டும். இவ்வாறு செய்வதால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் நீங்கும்.
3. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் பாக்டீரியாக்களின் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது என்பதால் அந்தரங்க உறுப்பில் தயிர் தேய்த்து கழுவி வரலாம்.
4. வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் வேப்பெண்ணையை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு அந்தரங்க பகுதியில் தேய்த்து காலையில் குளித்து வரலாம்.
5. ஒரு பாத்திரத்தில் வேப்பிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தரங்க உறுப்புகளை இந்த தண்ணீரில் கழுவி வரலாம். இது போன்ற வீட்டு வைத்திய முறைகளின் படி அந்தரங்க பகுதியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: மலச்சிக்கலை முற்றிலுமாக குணப்படுத்தும் மங்குஸ்தான்.. வேறு என்னென்ன நன்மைகள்.!?