ஈவினிங் ஸ்நாக்ஸ் : குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு கேபேஜ் பக்கோடா.. ட்ரை பண்ணி பாருங்க.!?



Recipe for cabbage pakkoda

குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்னாக்ஸ்

ஸ்கூல் முடிந்ததும் வீட்டிற்கு வரும் பள்ளி குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஸ்னாக்ஸ் செய்து தரச் சொல்லி அடம்பிடிப்பார்கள். அப்படியான குழந்தைகளுக்கு ஹெல்தியாகவும், சுவையாகவும் கேபேஜ் பக்கோடா செய்து கொடுத்து பாருங்க. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும். கேபேஜ் பக்கோடா எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்?

Cabbage

கேபேஜ்

பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 50 கிராம்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
கடலை மாவு - 100 கிராம்
எண்ணெய் - 1/4 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் நறுக்கியது - 1
முட்டைக்கோஸ் - 1

இதையும் படிங்க: மலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முட்டைகோஸ் சூப்.! எப்படி செய்யலாம்.!?

செய்முறை

முதலில் முட்டைக்கோசை பொடி பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்த முட்டைக்கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பக்கோடா மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Cabbage

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் கலந்து வைத்த பக்கோடா மாவை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் இதனை தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படிங்க: ஒரு கப் கோதுமை மாவில் ஹெல்தியான இடியாப்பம்.! இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!?