மலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முட்டைகோஸ் சூப்.! எப்படி செய்யலாம்.!?



Benefits of eating cabbage soup

நார்ச்சத்து நிறைந்த முட்டைகோஸ் 

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் வீடுகளில் சமைத்து உண்ணும் உணவை விட ஹோட்டல்களில் உள்ள உணவையே பலரும் விரும்பி உண்ணுகின்றனர். இவ்வாறு  ஹோட்டல்களில் உள்ள உணவுகளை உண்பதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. மேலும் பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்ணும் போது அதில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாததால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகின்றது.

Cabbage

மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

இந்த மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்வதற்கு நம் உண்ணும் உணவு முறைகளை மாற்றிக் கொண்டாலே போதுமானது. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குறிப்பாக நார் சத்து நிறைந்த முட்டைக்கோசை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டைக்கோஸ் வைத்து சூப் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஒரே நாளில் குணமாகும். இந்த முட்டைகோஸ் சூப் எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?

இதையும் படிங்க: தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யும் பெருஞ்சீரகம்.. எப்படி பயன்படுத்தலாம்.!?

தேவையான

பொருட்கள்…முட்டை கோஸ் -1
மிளகு , சீரகம் - 1டீ ஸ்பூன்
இஞ்சி - 1துண்டு,
பூண்டு - 10 பல்
வெங்காயம் - 2
எண்ணெய் - தேவையான அளவு,
மல்லி தழைகள்
சோள மாவு
Cabbage

செய்முறை

முதலில் ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி பின்பு அரிந்து வைத்த முட்டைக்கோசை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனை இரண்டு விசில் வரும் வரை நன்றாக வேக விடவும். வெந்த பின்னர் இதில் 1ஸ்பூன் சோள மாவை தண்ணீரில் கரைத்து குக்கரில் ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்து வரும் போது இதில் அரைத்து வைத்த சீரகம் மற்றும் மிளகு தூள், கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான மலச்சிக்கலை போக்கும் முட்டைகோஸ் சூப் தயார்.

இதையும் படிங்க: நரம்பு பிரச்சனையை ஓட ஓட விரட்டும் ஏலக்காய்.! எப்படி பயன்படுத்தலாம்.!?