ஒரு கப் கோதுமை மாவில் ஹெல்தியான இடியாப்பம்.! இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!?



Healthy wheat tiffin for childrens

கோதுமை மாவு இடியாப்பம்

பொதுவாக பல குடும்பங்களிலும் காலையில் எழுந்தவுடன் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் பெரும்பாலும் காலை உணவாக இருக்கும். தினமும் ஒரே மாதிரியாக இட்லி தோசையை சாப்பிடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தும். எனவே கோதுமை மாவை வைத்து இப்படி வித்தியாசமாக இடியாப்பம் செய்து பாருங்கள். இது சுவையாகவும், ஹெல்தியாகவும் இருக்கும்.

foods

கோதுமை

மாவு இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்,
அரிசி மாவு - ¼ கப்,
உப்பு - சிறிதளவு,
தண்ணீர் - தேவையான அளவு,
எண்ணெய் - 1 தேக்கரண்டி

இதையும் படிங்க: வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய இந்த 4 சைவ உணவுகளை சாப்பிட்டு பாருங்க.!?

செய்முறை

முதலில் ஒரு கடாயில் கோதுமை மாவை போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் அரிசி மாவு மற்றும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதனை 15 நிமிடங்கள் வரை மூடி போட்டு வைத்து விடவும். பின்னர் இடியாப்பம் பிழியும் கருவியில் மாவை நிரப்பி இட்லி தட்டில் இடியாப்பத்தை பிழிந்து விடவும். இதனை அடுப்பில் வைத்த 10 நிமிடங்களுக்கு நன்றாக வேக வைத்து இறக்கினால் ஹெல்தியான கோதுமை மாவு இடியாப்பம் தயார். இதனை தேங்காய் பால் அல்லது சட்னி, பாயா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

இதையும் படிங்க: சிறுநீரகத்தை பாதுகாக்க மது அருந்துவதற்கு முன் இந்த உணவை கட்டாயமாக சாப்பிடுங்க.!?