10 நிமிடத்தில் ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.! குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு உருளை கிழங்கு ஸ்நாக்ஸ்.!?



Recipe for potato snacks

ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் வீட்டிற்குள் வந்ததும் ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு கடைகளில் வாங்கும் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தருவதற்கு பதில் ஊட்டச்சத்தான உருளைக்கிழங்கை வைத்து ஸ்நாக்ஸ் வீட்டிலேயே பத்து நிமிடத்தில் எளிதாக செய்து தரலாம். இந்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்?

Food

உருளைக்கிழங்கை

வைத்து ஸ்நாக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு - 1,
இட்லி மாவு - 1 கப்,
வர மிளகாய் - 3,
பூண்டு - 4,
சோம்பு - 1/2 ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),
அரிசி மாவு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஆடி மாத கூழ்.! எப்படி செய்யலாம்.!?

Food

செய்முறை

முதலில் வரமிளகாயை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஐந்து இடங்களுக்கு ஊறவைத்து கொள்ளவும். பின்னர் உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீள வாக்கில் வெட்டி குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய் சோம்பு, பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் தோசை மாவு ஒரு பாத்திரத்தில் சேர்த்து அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து உப்பு, கொத்தமல்லி தழைகள், வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிது அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து வேக வைத்த உருளை கிழங்கை மாவில் நன்கு முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்த உருளை கிழங்கு ஸ்னாக்சை தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறினால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படிங்க: இந்த நோய் இருப்பவர்கள் சப்பாத்தி சாப்பிடுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.! ஏன் தெரியுமா.!?