குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஆடி மாத கூழ்.! எப்படி செய்யலாம்.!?



Recipe for aadi month special food

அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம்

பொதுவாக ஆடி மாதம் வந்தாலே கோயில் திருவிழாக்கள் கலை கட்டும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுவது தமிழ்நாட்டில் விசேஷமான முறையாக இருந்து வருகிறது. இந்த ஆடி மாத கூழ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் விருப்பமான உணவாகவும் இருந்து வருகிறது.

Recipe

பிரதான உணவாக இருந்து வந்த கூழ்

பொதுவாக அந்த காலத்தில் கூழ் என்பது மிகவும் ஊட்டச்சத்தான, பிரதானமான உணவாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஒரு சிலரே கூழ் அருந்தி வருகின்றனர். இப்படியிருக்க ஆடி மாதத்தில் மட்டுமே மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் கூழ் வழங்கும் விசேஷம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அம்மன் கோயில்களில் வழங்கப்படும் கூழ் வீட்டிலேயே சுவையாக எவ்வாறு செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?

இதையும் படிங்க: சீன மக்கள் விரும்பி சாப்பிடும் வெள்ளரி விதை.! என்ன காரணம் தெரியுமா.!?

ஆடி

மாத ஸ்பெசல் கூழ் செய்ய தேவையான பொருட்கள்கேழ்வரகு மாவு - 1 கப்
தண்ணீர் - 3 கப்
சின்ன வெங்காயம் - 5 - 10
தயிர் - 1 கப்
மோர் மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் அடி கனமான மற்றும் அகலமான ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கேழ்வரகு மாவை தண்ணீரில் போட்டு சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். உப்பு சேர்த்து கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். இவ்வாறு பத்து முதல் 15 நிமிடங்களுக்கு கிளறிவிட்டு கொண்டே இருந்தால் கேழ்வரகு மாவு நன்றாக வெந்துவிடும்.

Recipe

பின்னர் அடுப்பில் இருந்து இறக்கியதும் சின்ன வெங்காயம், தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் மோர் மிளகாயை எண்ணெயில் வறுத்து கூழில் சேர்த்துக் கொள்ளவும். மோர் மிளகாய் காரம் பிடிக்காதவர்கள் தனியாக வைத்தும் சாப்பிடலாம். இதனை பத்து நிமிடங்களுக்குப் பிறகு பரிமாறினால் சுவையான குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு பிடித்த ஆடி மாத கூழ் தயார்.

இதையும் படிங்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாதாம் பிசின்.? வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.!?