3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
குட்டீஸ்களை வெஜிடபிள் சாப்பிட வைக்கணுமா.?! இதை முயற்சி செய்யுங்கள்.!
பெரும்பாலான குழந்தைகள் காய்கறிகளை விரும்புவது இல்லை. காரணம், அது அவர்களுக்கு பிடித்த சுவையில் இருப்பதில்லை. ஆகையால், வளரும் குழந்தைகளுக்கு போதிய சத்துக்கள் கிடைப்பதில்லை. இப்பதிவில் குழந்தைகளுக்கு பிடித்த சுவையில் ஒரு அட்டகாசமான வெஜிடபிள் புலாவ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
பச்சை பட்டாணி - 1 கப் (ஊற வைத்தது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 2
அண்ணாச்சி பூ - 2
பிரிஞ்சி இலை - 1
சின்ன சீரகம் - 1/2 ஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடி
தேங்காய் பால் - 1 கப்
கரம் மசலா- 1/2 ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைக்க வேண்டும். பிறகு, குக்கர் சூடேறியதும் அதில் 2 தேக்கரண்டி கடலை எண்ணெய், 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் கிராம்பு 2, பட்டை 1 (துண்டு), ஏலக்காய் 3, அண்ணாச்சி பூ 2, பிரிஞ்சி இலை 1, சின்ன சீரகம் 1/2 ஸ்பூன் சேர்த்து பொறிந்ததும் அதில், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
இதையும் படிங்க: உயரத்தை அதிகரிக்கச் செய்யும்.. 5 உணவுகள்.. ஒரே மாதத்தில் கண்கூடாக வளர்ச்சியை காணலாம்.!
மேலும், அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், புதினா ஒரு கைப்பிடி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு, ஊற வைத்த பச்சை பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
காய்கறிகள் நன்றாக வேக சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, அதில் கரம் மசாலா 1/2 ஸ்பூன் சேர்த்து கிளற வேண்டும். அடுத்து, அதில் ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து அரிசி உடைந்து போகாமல் மிதமாக கிளற வேண்டும். பின்னர், 1/2 கப் தண்ணீர், 1 கப் தேங்காய் பால் இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமாக கிளறி குக்கர் மூடி போட்டு மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும். இப்போது சூடான, சுவையான வெஜ்டபிள் புலாவ் தயார்.!
இதையும் படிங்க: வீடு துடைத்த மாப்பை எப்படி கிளீன் செய்வது என குழப்பமா.?! இதோ சூப்பர் டிப்ஸ்.!