உயரத்தை அதிகரிக்கச் செய்யும்.. 5 உணவுகள்.. ஒரே மாதத்தில் கண்கூடாக வளர்ச்சியை காணலாம்.!



Height increase foods for Children

பெற்றோர்கள் மரபணு காரணமாக குள்ளமாக பிறக்கும் குழந்தைகள் உண்டு. இது இயற்கை தான். ஆனால், பெற்றோர்கள் உயரமாக இருந்தும் குள்ளமாக இருக்கும் குழந்தைகளுக்கு உணவுப் பட்டியலில் சிறு மாற்றம் செய்தால் அவர்கள் உடல் அமைப்புக்கேற்ற உயரத்தை அடையச் செய்யலாம். அதற்கான அருமையான குறிப்புப் பற்றி இப்பதிவில் காண்போம்.

பச்சை காய்கறிகள் :
பச்சைக் காய்கறிகளில் அதிக வைட்டமின்கள் உள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் கே , வைட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, நார்ச்சத்துக்கள், மெக்னீசியம் போன்ற  சத்துக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைகள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் குழந்தைகள் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.

குள்ளமான குழந்தைகளை வளர செய்யும் உணவுப் பட்டியல்

கால்சியம் நிறைந்த உணவுகள்

பால், தயிர், சீஸ் போன்ற பொருட்களில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. தினமும் குழந்தைகளுக்கு இரண்டு கிளாஸ் பால் கொடுக்க வேண்டும். இது எலும்பை வலுவடையச் செய்யும். மேலும், குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகுக்கிறது. அடுத்த மிக முக்கியமான உணவு அத்திப்பழம்.
உலர்ந்த அத்திப்பழத்தையோ (அல்லது) புதிய அத்திப்பழத்தையோ தினமும் நான்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதில், கால்சியம் அளவு அதிகம் உள்ளது. நான்கு அத்திப்பழத்தில் (135 மில்லிகிராம்)
கால்சியம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சியை தூண்டுகிறது.

இதையும் படிங்க: #பேச்சிலர்_ஸ்பெஷல் : 10 நிமிடத்தில் செய்து, 10 நாளுக்கு வைத்து சாப்பிடும் சூப்பரான தக்காளித் தொக்கு.!

மேலும், தானிய வகையிலும் கால்சியம் நிறைந்துள்ளது. உதாரணமாக சியா, பாதாம், எள், செலரி மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. பீன்சில் (160 மில்லிகிராம்) கால்சியம் அடங்கியுள்ளது. இந்த வகை பொருட்களை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்க்க குழந்தையின் வளர்ச்சியை விரைவில் காணலாம்.

குழந்தைகள் வளரச் செய்யும் அசைவ உணவுகள்

Height

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு அசைவம் முக்கிய பங்கு வகிக்கிறது. 'சால்மன்' மீன் போன்ற அசைவ உணவை உணவுப் பட்டியலில் சேர்க்க வேண்டும். சால்மன் மீன் ஆரோக்கியமான கொழுப்பைக் கொண்டது. இது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். அடுத்து, குழந்தைகளுக்கு தினமும் கொடுக்க வேண்டிய அசைவ உணவான முட்டை. தினமும் ஒரு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இது அவர்களின் எலும்பை வலிமைப் படுத்தும். மேலும், முட்டை வைட்டமின் B12 சத்து நிறைந்தது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் கீரை வகைகள்

பச்சை கீரை வகைகளை அதிகம்
குழந்தைகளின் உணவுப் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டாகும்.
குள்ளமான குழந்தைகளை வளர செய்ய முளைக்கீரையை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு, மூன்று முறையாவது குழந்தைகளுக்கு உணவுகளில் சேர்க்க வேண்டும். இந்த கீரை செரிமான கோளாறுகளையும் சரி செய்யும். ஆகையால், குழந்தைகளுக்கு பயம் இல்லாமல் கொடுக்கலாம்.

பழங்கள்

குழந்தைகளுக்கு தினமும் பழங்கள் கொடுத்து பழக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு போதிய வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக்கும். குள்ளமாக இருக்கும் குழந்தைகளை வளர செய்ய தினமும் மூன்று வகை பழங்களை கொடுக்க வேண்டும். இதில், வாழைப்பழம் மிகவும் முக்கியம். தினமும் இரண்டு வாழைப்பழம் கட்டாயம் குழந்தைகளின் உணவுப் பட்டியலில் இருக்க வேண்டும். குழந்தைகள் அப்படியே சாப்பிட மறுத்தால் சாலட் அல்லது ஜூஸ் செய்து கொடுக்கலாம்.