திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சண்டே ஸ்பெஷல் : மாம்பழ சீசனில் சுவையான மாம்பழ கேசரி இப்படி செய்து பாருங்கள்.!?
மாம்பழம் கேசரி
மாம்பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு மாம்பழம் சுவையான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் சீசன் பழங்களில் ஒன்றுதான் மாம்பழம். சண்டே ஸ்பெஷலாக இந்த மாம்பழத்தை வைத்து சுவையாக கேசரி எப்படி செய்யலாம் என்பது குறித்து இப்படி விளக்கமாக பார்க்கலாம்?
தேவையான
பொருட்கள் :
ரவை - 1 கப்
தோல், விதை நீக்கிய மாம்பழம் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - ½ கப்
முந்திரி, பாதாம், திராட்சை - ¼ கப்
ஏலக்காய், குங்கமப்பூ - தேவையான அளவு
இதையும் படிங்க: கோதுமை மாவில் சுவையான பஞ்சு போல இட்லி இப்படி செய்து பாருங்க.? குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.!?
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்சி கொள்ளவும். பின்பு இதில் ரவையை போட்டு பொன்னிறத்தில் வறுத்தெடுக்க வேண்டும். பின்பு இந்த ரவையுடன் சர்க்கரை மற்றும் அரைத்த மாம்பழகூலை சேர்த்து கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக தண்ணீர் வற்றி வரும்போது ஒரு கடையில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு தாளித்து கேசரியில் குங்குமப்பூ, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மாம்பழ கேசரி தயார்.
இதையும் படிங்க: மாரடைப்பு வராமல் தடுக்கும் அற்புத உணவுகள்.? என்னென்ன தெரியுமா.!?