"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
மாரடைப்பு வராமல் தடுக்கும் அற்புத உணவுகள்.? என்னென்ன தெரியுமா.!?
மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுகளும், அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும் நம் உடலில் பலவகையான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடலையும், மனதையும் பலவீனமடைய செய்கிறது. இதனால் தூக்கம் பாதிப்பதோடு மாரடைப்பு, இதய நோய் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றது.
மேலும் இதய நோய், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதிப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதய ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பதும் அதற்கான உணவு முறைகளை பின்பற்றுவதும் முக்கியமானதாகும். எனவே நம் உடல் நலனை பாதுகாக்கும் பொருட்டு இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
இதையும் படிங்க: உங்கள் உடம்பில் வைட்டமின் பி12 குறைவாக உள்ளதா.? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்.!
இதய
நோய் வராமல் தடுக்கும் உணவுகள்1. தக்காளி - நான் அன்றாடம் அனைவரது வீட்டிலும் சமைக்கும் காய்கறிகளில் ஒன்று தான் தக்காளி. இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதய பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, உடலுக்கு தேவையான ஊட்டசத்தையும் அளிக்கிறது.
பீட்ரூட்
2. - மண்ணிற்கு அடியில் விளையும் வேர் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், மாங்கனிசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சிவப்பு குடைமிளகாய், ராஸ்பெரி, ஸ்ட்ராபெரி, கிரான்பெரி, செர்ரி போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக செயல்பட்டு மாரடைப்பு, இதய நோய் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.
இதையும் படிங்க: சாப்பிட்டவுடன் இந்த விஷயங்களை கண்டிப்பாக மறந்தும் கூட செய்யாதீங்க.! உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.!?