மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோதுமை மாவில் சுவையான பஞ்சு போல இட்லி இப்படி செய்து பாருங்க.? குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.!?
பொதுவாக நம் அனைவரது வீட்டிலும் அடிக்கடி சமைக்கும் உணவுதான் இட்லி. காலை மற்றும் இரவு உணவாக அதிகமாக விரும்பப்படும் உணவாக இட்லி இருந்து வருகிறது. அரிசி மற்றும் உளுந்து மாவில் செய்யப்படும் இட்லியை, கோதுமை மாவிலும் சுவையாக குழந்தைகளுக்கு பிடித்தது போல் செய்து தரலாம். இந்த கோதுமை மாவு இட்லி எப்படி செய்யலாம் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தேவையான
பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
துருவிய கேரட் - 1
சமையல் சோடா - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
தயிர் - 1/2 கப் (அதிக புளிப்பில்லாதது)
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: அரிசிக்கு பதில் இதை சேர்த்து இட்லி மாவு அரைச்சி பாருங்க.. வேற லெவல்ல இருக்கும்.!
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கோதுமை மாவை போட்டு லேசாக வறுக்க வேண்டும். பின்பு அதை ஒரு தட்டில் ஆற வைத்து விட்டு, அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்தது லேசாக வதக்கி விடவும். பின்னர் அதில் துருவிய இஞ்சி மற்றும் துருவிய கேரட் சேர்த்து லேசாக வதக்கி கொத்தமல்லி இலைகளை தூவி ஆற வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு வதக்கிய கேரட் கலவைகள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கட்டி சேராமல் இட்லி மாவு பதத்திற்கு கலக்கி விடவும். பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கலக்கி வைத்திருக்கும் கோதுமை மாவை இட்லி போல் ஊற்றி எடுத்தால் சுவையான கோதுமை மாவு இட்லி தயார். இந்த கோதுமை மாவு இட்லியை தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னியுடன் சேர்த்து வைத்து சாப்பிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படிங்க: சப்பாத்தி, பூரிக்கு உருளைக்கிழங்கு குருமா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! சுவை வேற லெவலில் இருக்கும்.!?