மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து பாருங்க.!?
வீட்டு வைத்திய முறைப்படி நோயை எவ்வாறு குணப்படுத்தலாம்?
பொதுவாக பலரும் தற்போது ஊட்டச்சத்து இல்லாத உணவுகளும், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளையும் அடிக்கடி விரும்பி உண்ணும் வருகின்றனர். இந்த உணவுகள் உடலில் பல நோய்களை ஏற்படுத்துவதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் செய்கிறது. குறிப்பாக தற்போது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனைக்கு எளிதாக எவ்வாறு தீர்வு காணலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.
நோய்களை குணப்படுத்தும் வெந்நீர்
நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை சந்திக்கும் போது அவர்கள் தரும் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டு நோய்கள் குணமடைந்தாலும், பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படும். இவ்வாறு பக்கவிளைவுகள் இன்றி நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனையை சரி செய்வதற்கு வெந்நீர் போதும்.
இதையும் படிங்க: வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய இந்த 4 சைவ உணவுகளை சாப்பிட்டு பாருங்க.!?
வெறும் வயிற்றில் வெந்நீர்
காலையில் எழுந்தவுடன் காலை கடனை கழிக்க முடியாமல் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அத்தகைய நபர்கள் வெந்நீரில் சிறிது வெந்தயம் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடனடியாக மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். மேலும் எண்ணெயில் பொறித்த உணவுகள், இனிப்பு போன்ற பலகாரங்கள் சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் ஏற்படும். அப்போது தண்ணீரை கொதிக்க வைத்து மிதமான சூட்டில் குடித்து வரலாம்.
மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், மூக்கடைப்பு, தலைவலியால் அவதிப்படுபவர்கள், உடல் சூடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிப்பது நல்லது. இவ்வாறு பல்வேறு வகையில் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை வெந்நீர் சரி செய்கிறது.
இதையும் படிங்க: ஒரே நாளில் மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் அரிசி பொரி.! வேறு என்னென்ன நோய்களை தீரக்கும் தெரியுமா.!?